சர்க்கரை நோயாளிகளுக்கு உயிருக்கு எமனாக மாறும் 5 உணவுகள் - உஷார்!
இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினருக்குக்கூட சர்க்கரை நோய் என்ற நீரிழிவு நோய் தாக்குகிறது. ஒருவருடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது சர்க்கரை நோய் வரும். மேலும், ஒருவருடைய டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கு பல காரணங்கள் உண்டு.
சிலருக்கு பரம்பரையிலோ அல்லது குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால் வரும். மேலும், உடல் பருமன், சுகாதாரமற்ற உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை ஆகிய காரணங்களால் கூட ஒருவருக்கு சர்க்கரை நோய் ஏற்படும்.
உணவில் கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடக்கூடாத உணவுகளை சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு கூட நேரங்களில் ஆபத்தாக முடியும்.
சரி... சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள் எவைஎவை என்று பார்ப்போம் -
அரிசி
சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. சிவப்பு அரிசி, மட்டை அரிசி, கைக்குத்தல் அரிசி போதுமான அளவு எடுத்துக் கொள்ளலாம். அரிசியில் மாவுச்சத்து உள்ளது. அரிசியில் கார்போ ஹைட்ரேட் இருப்பதால் இது ரத்தச் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.
பால் கஞ்சி
சர்க்கரை நோயாளிகள் பாலில் காய்ச்சப்பட்ட கஞ்சிகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். சிறுதானியங்களை தனியாக வேக வைத்து சாப்பிடலாம். ஆனால், ஓட்ஸ் மற்றும் சிறுதானியங்களை பாலில் கலந்து குடித்தால், அவை ரத்த சர்க்கரை அளவை உயர்த்தி விடும்.
பழ ஜூஸ்
சர்க்கரை நோயாளிகள் வெளியே செல்லும்போது பழச்சாறு எடுத்துக் கொள்வார்கள். இதை தவிர்த்து விடுவது நல்லது. செயற்கையாக தயாரிக்கப்பட்ட பழஜூஸ்கள் உங்களின் ரத்த சர்க்கரை அளவை உயர்த்திடும். இதனால், உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும். செயற்கையாக தயாரிக்கப்பட்ட பானங்களில் நார்ச்சத்து இருக்காது. தவிர்ப்பது நல்லது.
பொரித்த உணவுகள்
சர்க்கரை நோயாளிகள் எண்ணெய்யால் பொரித்த உணவுகளான வடை, சமோசா, பக்கோடா போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அதில் கார்போ ஹைட்ரேட் மற்றும் கொழுப்பு மட்டுமே உள்ளது. இது உங்களின் இரத்த சர்க்கரை அளவை உயர்த்திவிடும். உங்களின் கொழுப்பின் அளவை அதிகரித்துவிடும்.
மைதா உணவுகள்
சர்க்கரை நோயாளிகள் பரோட்டா, பப்ஸ் போன்ற பேக்கரி உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. மைதாவில் அதிகளவிலான கார்ப்போ ஹைட்ரேட் உள்ளது. இது உங்களின் சர்க்கரை அளவை அதிகரித்து விடும்.
இந்த 5 உணவுகளை தவிர்த்து உணவுக் கட்டுப்பாட்டுன் இருந்து வந்தால் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |