நாயை காப்பாற்ற கடலில் குதித்து ஹீரோவான காவலர்! வைரலாகும் வீடியோ
அமெரிக்காவில் உயிர்காப்பாளர் கடலில் விழுந்த ஒரு சிறிய நாயைக் காப்பாற்றிய பின்னர் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார்.
வைரலான வீடியோ
தெற்கு கலிபோர்னியாவில் Long Beach தீயணைப்புத் துறையால் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் கடல் தண்ணீரில் மூழ்க இருந்த நாய் ஒன்றை காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
Long Beach Lifeguards குழுவைச் சேர்ந்த காவலர் ஒருவர், விரைந்து செயல்பட்டு குறித்த நாயை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.
இதுதொடர்பான வீடியோவை Long Beach Lifeguards குழு வெளியிட்டது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.
ஹீரோவான காவலர்
இந்த உதவியின் மூலம் குறித்த காவலர் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார். இந்த நிலையில் குறித்த நாய் அதன் உரிமையாளருடன் மீண்டும் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5000 ஏக்கருக்கும் அதிகமான கடல் முகப்பு சொத்துக்களை கண்காணித்து பாதுகாக்கும் பொறுப்பை Long Beach Lifeguards வகிக்கின்றனர்.
@LongBeach Fire Department

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.