விமான பயணிகள் உட்பட இனி எவருக்கும் கொரோனா சோதனை தேவையில்லை: முதல்முதலாக அறிவித்த நாடு
மத்திய கிழக்கு நாடான துருக்கியில் இனி விமான பயணிகள் உட்பட உள்ளூர் மக்களுக்கும் PCR கொரோனா சோதனை முடிவுகள் தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் இதுவரை திரையரங்குகள், நாடக மேடைகள் மற்றும் கச்சேரி அரங்குகள் உட்பட பேருந்துகள், ரயில்கள் மற்றும் உள்நாட்டு விமான சேவைகளை பயன்படுத்த PCR கொரோனா சோதனை முடிவுகள் கட்டாயம் என்ற விதி அமுலில் இருந்து வந்தது.
ஆனால் தற்போது குறித்த கட்டுப்பாடுகளை நீக்குவதாக துருக்கி அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த புதிய விதி, தடுப்பூசி மறுப்பாளர்களுக்கும் பொருந்தும் எனவும் அறுவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, பொதுத் துறை மற்றும் தனியார் துறையில் உள்ள ஊழியர்கள் இனி பணிக்கு செல்லும்போது கொரோனா பாதிப்பு இல்லை என்ற சோதனையை நிரூபிக்க வேண்டியதில்லை.
துருக்கியின் உள்விவகாரத்துறை சனிக்கிழமை குறித்த உத்தரவை வெளியிட்டுள்ளதாக அரசு செய்தி ஊடகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, வெள்ளிக்கிழமை வெளியான தகவலின் அடிப்படையில், சுமார் 68,000 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 167 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.