பிரித்தானியாவில் விமான விபத்து: இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழப்பு
வடக்கு வேல்ஸ் பகுதியில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
சிறிய ரக விமான விபத்து
இங்கிலாந்தில் உள்ள விமான நிலையம் ஒன்றில் இருந்து வடக்கு வேல்ஸின் கார்னர்ஃபோன் விமான நிலையத்தை நோக்கி சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
ஆனால் திட்டமிட்டபடி விமானம் கார்னர்ஃபோன் விமான நிலையத்தை வந்து சேராததை அடுத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் தரை மற்றும் வான்வழி மீட்பு படையினர் களமிறக்கப்பட்டனர்.
தீவிர தேடுதல் பணிகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை பிற்பகலில் Gwynedd பகுதியில் உள்ள Porthmadog அருகே சிறிய ரக விமானத்தின் சிதைந்த பாகங்கள் கிடப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இருவர் உயிரிழப்பு

இந்த விமான விபத்தை தொடர்ந்து, அதில் பயணம் செய்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விமான விபத்து புலனாய்வுப் பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதுடன், விபத்துக்கான காரணத்தை கண்டறிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |