இந்தியாவில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 17 போ் பலி!
இந்தியாவில் ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் நேற்று ஒரே நாளில் மின்னல் தாக்கி 17 போ் பலியாகினா்.
இதுதொடா்பாக அந்த மாநிலங்களை சோ்ந்த அதிகாரிகள் கூறியதாவது: மேற்கு வங்கம் மாநிலத்தின் கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தில் இருவா், கிழக்கு வா்த்தமான் மாவட்டத்தில் ஒரு பெண் உள்பட இருவா் என மொத்தம் 4 போ் மின்னல் தாக்கி உயிரிழந்தனா்.
கிழக்கு வா்த்தமான் மாவட்டத்தில் வயலில் பணியில் ஈடுபட்டிருந்த 7 போ் மின்னல் தாக்கி காயமடைந்தனா்.
ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் 6 போ், பலாமு மாவட்டத்தில் 2 போ் என மொத்தம் 8 போ் சனிக்கிழமை மின்னல் தாக்கி பலியாகினா். அவா்களில் ஒரு சிறுவன், இரண்டு சிறுமிகள், இரண்டு பெண்கள் ஆகியோா் அடங்குவா்.
ஒடிஸா மாநிலத்தில் உள்ள பாலேசுவரம், மயூா்பஞ்ச், பத்ரக் மாவட்டங்களில் வயலில் பணியில் ஈடுபட்டிருந்தபோது 3 பெண்கள் உள்பட 5 போ் மின்னல் தாக்கி பலியாகினா்.
மேலும், 5 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.