கனவு வேலையை கண்டுபிடியுங்கள்! LinkedIn ராஜா ரைட் ஹாஃப்மன் வெற்றிக் கதை, சொத்து மதிப்பு
லிங்க்டின்(LinkedIn) இணை நிறுவனர் மற்றும் செயல் தலைவர் ரைட் ஹாஃப்மன்(Reid Garrett Hoffman) இன்று தொழில் துறை நெட்வொர்க்கிங்கிற்கு மிகப்பெரிய வழங்கலை கொடுத்துள்ளார்.
ஆரம்ப காலம் மற்றும் கல்வி
ஹாஃப்மன் 1967 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் Palo Alto-வில் பிறந்தார். 1990 இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார், அங்கு அவர் கணினி அறிவியல் பட்டம் பெற்றார்.
பின்னர் அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்று தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஆப்பிள் முதல் தொழில் முனைவோர் வரை
தொழில்நுட்ப துறையில் ரைட் ஹாஃப்மனின்(Reid Hoffman) பயணம் 1994 இல் ஆப்பிள் கம்ப்யூட்டரில் தொடங்கியது, அங்கு அவர் ஆரம்பகால ஆன்லைன் சேவையான eWorld இல் பணியாற்றினார்.
இந்த அனுபவம் இணையத்தின் திறன் மீதான அவரது ஆர்வத்தை தூண்டிவிட்டது. பின்னர் 1997 அவர் ஒரு டேட்டிங் தளமான SocialNet ஐ இணை நிறுவினார்.
இதனை சிலர் முதல் ஆன்லைன் சமூக வலைப்பின்னல் என்று கருதுகின்றனர், இருப்பினும் இறுதியில் அது வெற்றிபெறவில்லை.
ஆனால், SocialNet அவரது அடுத்த முயற்சிக்கான springboard ஆக செயல்பட்டது.
பிறகு 2000ம் ஆண்டில் PayPal-ல் நிர்வாகக் குழுவின் நிறுவனர் உறுப்பினராக இருந்தார்.
பேபால் நிறுவனத்தின் வெற்றி, தொழில்நுட்ப துறையில் ஒரு தொலைநோக்கு தலைவராக ஹாஃப்மனின் நற்பெயரை நிலைநிறுத்தியது.
லிங்க்டின் பிறப்பு(LinkedIn Birth)
2002 ஆம் ஆண்டில், டிஜிட்டல் யுகத்தில் தொழில்முறை இணைப்புகளின் தேவை அதிகரித்து வருவதை உணர்ந்து, ஹாஃப்மன், ஆலன் ப்ளூ மற்றும் முன்னாள் SocialNet சகாக்களுடன் இணைந்து லிங்க்டினைக் கூட்டாக நிறுவினார்.
இந்த தளம் தொழில்முறை நெட்வொர்க்கிங்கில் புரட்சியை ஏற்படுத்தியது, தனிநபர்கள் சக ஊழியர்களுடன் இணைவது, தங்கள் திறமைகள் மற்றும் அனுபவத்தை வெளிப்படுத்துவது மற்றும் புதிய தொழில் வாய்ப்புகளைக் கண்டறிவது ஆகியவற்றை அனுமதித்தது.
ஹாஃப்மனின் வழிகாட்டுதலின் கீழ், லிங்க்டின் சிறப்பாக(exponentially) வளர்ந்தது, உலகளவில் தொழில் வல்லுநர்களுக்கான தேர்வு செய்யும் தளமாக மாறியது.
லிங்க்டினுக்கு அப்பால்
ஹாஃப்மனின் செல்வாக்கு லிங்க்டினுக்கு அப்பால் செல்கிறது. அவர் Greylock Partners என்ற முதலீட்டு நிறுவனத்தில் பங்குதாரர் ஆவார்.
அவர் ஒரு திறமையான எழுத்தாளர் மற்றும் பிரபலமான போட்காஸ்ட் "மாஸ்டர்ஸ் ஆஃப் ஸ்கேல்" இன் தொகுப்பாளர் ஆவார்.
சொத்து மதிப்பு
அறிக்கைகளின் அடிப்படையில், LinkedIn-இன் தற்போதைய செயல் தலைவர் ரைட் ஹாஃப்மனின் சொத்துமதிப்பு $3.7 பில்லியன் ஆகும். உலக பணக்காரர்களின் Forbes பட்டியலில், ரைட் ஹாஃப்மன் 159வது இடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Reid Hoffman LinkedIn co-founder, Reid Hoffman net worth, How did Reid Hoffman start LinkedIn?, Silicon Valley legend, Tech entrepreneur, Venture capitalist, Social network pioneer, Business leader, PayPal, Stanford Oxford,