கூண்டில் திடீரென சர்க்கஸ் வீரரை விரட்டி கடித்த சிங்கம்! அலறிய பார்வையாளர்கள்..அதிர்ச்சி வீடியோ
சீனாவில் நடந்த நிகழ்ச்சியின்போது சிங்கம் ஒன்று சர்க்கஸ் வீரரை புரட்டியெடுத்தது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சர்க்கஸ் நிகழ்ச்சி
சீனாவின் டோங்னிங் சிட்டியில் கடந்த 22ஆம் திகதி சர்க்கஸ் நிகழ்ச்சி நடந்தது. அதில் கூண்டில் அடைக்கப்பட்ட சர்க்கஸ் மேடையில் இரண்டு சிங்கங்களை கட்டுப்படுத்தும் அபாயகரமான செயல்பாட்டை வீரர் மேற்கொண்டார்.
அப்போது பெண் சிங்கம் நின்று கொண்டிருந்தபோது, ஆண் சிங்கம் திடீரென வீரரை தாக்கியது.
வீரரை தாக்கிய சிங்கம்
அவரை விரட்டி விரட்டி சிங்கம் கடிக்க, குறித்த வீரரோ பயத்தில் தப்பி ஓடினார். இதனை பார்வையாளர்கள் பதறிப்போயினர். இந்த தாக்குதலுக்கு பின் நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டது.
மேலும் சர்க்கஸ் பார்வையாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு மறுநாள் சிங்கம் வரை கண்டிக்கவில்லை, ஆனால் கையில் காயம் ஏற்பட்டது என சூனிங் டவுன் மேயர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |