2023 புத்தாண்டை தங்கள் பாணியில் வரவேற்ற மெஸ்ஸி மற்றும் அவர் மனைவி! புகைப்படங்கள்
கால்பந்து உலகக் கோப்பை நாயகன் லியோனல் மெஸ்ஸி மற்றும் குடும்பத்தார் தங்களின் ஸ்டைலான பாணியில் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
புத்தாண்டை வரவேற்ற மெஸ்ஸி மற்றும் குடும்பம்
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி சமீபத்தில் நடந்து முடிந்த கத்தார் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த நிலையில் நேற்று பிறந்த 2023 புத்தாண்டை தங்கள் பாணியில் மகிழ்ச்சியோடு மெஸ்ஸி குடும்பத்தார் வரவேற்றனர்.
அதன்படி மெஸ்ஸி மற்றும் அவர் மனைவி அன்டோனெல்லா ரோகுஸ்ஸோ சேர்ந்து நிற்கும் அழகிய புகைப்படங்களை தம்பதி வெளியிட்டுள்ளனர்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இதோடு தங்களின் மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களையும் மெஸ்ஸி, அண்டோனெல்லா ஆகியோர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அண்டோனெல்லா பதிவில், 2023! உங்களுக்காக அனைவருடனும் காத்திருக்கிறோம்!!!! அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.