கொல்கத்தா மைதானத்தில் குழப்பம்: மெஸ்ஸியை பார்க்க முடியாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள்
G.O.A.T டூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தா வந்த கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸியை சரியாக பார்க்க முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்தியா வந்த மெஸ்ஸி
உலகின் பிரபலமான கால்பந்து விளையாட்டு வீரரான லியோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில், கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த “G.O.A.T டூர் “ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
Messi’s brief 5-minute appearance sparked chaos at Salt Lake Stadium, West Bengal as angry fans turned violent, throwing bottles, belts, chairs and vandalising hoardings.#Messi𓃵 #GOAT #MessiInIndia
— Sarcasm (@sarcastic_us) December 13, 2025
pic.twitter.com/PwRzP7BDeD
காலை 11.15 மணிக்கு மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி, மைதானத்தை முழுமையாக சுற்றி வந்து கூடி இருக்கும் அனைத்து ரசிகர்களையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மெஸ்ஸி மைதானத்தின் சுரங்கப் பாதையில் இருந்து வெளியே வந்த சில நிமிடங்களிலேயே, மைதானத்தில் இருந்த கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக குழப்பம் ஏற்பட்டது.
இதனால் மைதானத்தை மெஸ்ஸி முழுமையாக சுற்றி வருவதற்குள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக சால்ட் லேக் மைதானத்தில் இருந்து மெஸ்ஸியை விரைவாக அழைத்துச் சென்றனர்.
கொந்தளித்த ரசிகர்கள்
மெஸ்ஸியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ரூ.5000 முதல் ரூ.25,000 வரை அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் தங்கள் நட்சத்திர வீரர் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை என்பதால் ஆத்திரமடைந்தனர்.

சிலர் கோபத்தில் தண்ணீர் போத்தல்கள் மற்றும் நாற்காலிகளை மைதானத்திற்குள் தூக்கி எறிந்தனர்.
சிலர் மைதானத்தின் பாதுகாப்பு எல்லைகளை கடந்து அத்துமீறி நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை சேதப்படுத்தினர்.
ரசிகர் ஒருவர் இந்த சம்பவத்தை அவமானம் என்று கண்டித்தார், மற்றொருவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மோசமான நிர்வாகம் என சுட்டிக் காட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |