ரொனால்டோ நெருங்க முடியாத இமாலய சாதனை படைத்த மெஸ்ஸி
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 400 கோல் உதவிகள் புரிந்து சாதனை படைத்துள்ளார்.
மெஸ்ஸி
ஃபுளோரிடோவின் சேஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் நாஷ்வில்லே மற்றும் இன்டர் மியாமி அணிகள் மோதின. 
இப்போட்டியில் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) இரண்டு கோல்களும், டாடியோ அலன்டே இரண்டு கோல்களும் அடித்தனர்.
நாஷ்வில்லே தரப்பில் ஒரு கோல் கூட அடிக்கப்படாததால், இன்டர் மியாமி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் மெஸ்ஸி தனது 400வது கோல் உதவி (Assist) பெற்றார். இதன்மூலம் கால்பந்து வரலாற்றில் இந்த இலக்கை (400) அடைந்த இரண்டாவது வீரர் எனும் இமாலய சதனையைப் படைத்தார்.
400 கோல் உதவிகள்
அர்ஜென்டினா மற்றும் கிளப் அணிகளுக்காக அவர் 400 கோல் உதவிகள் புரிந்துள்ளார். ஹங்கேரி வீரர் ஃபெரென்க் புஸ்காஸ் (Ferenc Puskas) 404 கோல் உதவிகள் புரிந்து முதலிடத்தில் உள்ளார்.
அவரை முந்தி வரலாறு படைக்க லியோனல் மெஸ்ஸிக்கு இன்னும் 4 கோல்களே தேவை. நடப்பு சீசனில் அவர் பிளேஆப் சுற்றுகளில் 5 கோல்கள் அடித்துள்ளார்.
மெஸ்ஸியின் சக போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) 287 கோல் உதவிகள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |