மெஸ்ஸி ஒரு சாக்கடை எலி, குள்ளன்.., ஜாம்பவான் மீது வன்மத்தை கக்கிய முன்னாள் பார்சிலோனா இயக்குநர்
கால்பந்தாட்டத்தில் ஜாம்பவானாக கொண்டாடப்படும் லியோனல் மெஸ்ஸியை, 'சாக்கடை எலி' என்றும் 'ஹார்மோனல் குள்ளன்' என்றும் அவதூறாக பேசியுள்ளார் முன்னாள் பார்சிலோனா இயக்குநர்.
மெஸ்ஸி மீதான வன்மம்
முன்னாள் பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப்பின் தலைவர் ஜோசப் பார்டோமியூ (Josep Bartomeu) வாரிய உறுப்பினர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில், லியோனல் மெஸ்ஸியை (Lionel Messi) "சாக்கடை எலி" மற்றும் "ஒரு ஹார்மோன் குள்ளன்" என்று அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பார்சிலோனாவின் மற்றோரு வீரரான Gerard Piqué-வையும் மிகக் கேவலமாக பேசியுள்ளார்.
Getty Images
பார்டோமியூ கிளப்பில் இருந்தபோது FC பார்சிலோனாவின் சட்ட சேவைகளின் தலைவரான ரோமன் கோம்ஸ் போண்டி இந்த தகவலை வெளியிட்டார்.
லியோனல் மெஸ்ஸி உட்பட பல வீரர்களின் ஒப்பந்த நீடிப்பு குறித்து வாரிய உறுப்பினர்கள் விவாதித்த போதே இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜோசப் பார்டோமியூ
2014 முதல் 2020 வரை ஸ்பானிய கால்பந்து கிளப்பின் தலைமைப் பொறுப்பில் Bartomeu இருந்தார். பார்டோமியூ, முன்னாள் பொது இயக்குநர் ஆஸ்கார் கிராவ் மற்றும் நிதி இயக்குனர் பாஞ்சோ ஷ்ரோடர் மற்றும் வியூகம் மற்றும் புதுமை ஜாவியர் சோப்ரினோவின் டைரக்டரி உள்ளிட்ட முன்னாள் குழு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு வாட்ஸ்அப் குழுவில் இந்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பார்டோமியூ வெளியேறிய பிறகு இந்த குழு உறுப்பினர்கள் அனைவரும் கிளப்பில் இருந்து ராஜினாமா செய்தனர்.
பார்சிலோனாவில் மெஸ்ஸி
மெஸ்ஸி 2004 முதல் 2021 வரை FC பார்சிலோனாவின் மூத்த அணிக்காக விளையாடினார். அவர்களுக்காக 520 ஆட்டங்களில் 474 கோல்களை அடித்தார்.
தற்போது பிரான்சின் கிளப் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில், மெஸ்ஸி அர்ஜென்டினாவை அதன் மூன்றாவது FIFA உலகக் கோப்பை பட்டத்திற்கு வழிநடத்தினார்.