சிங்கநடை போடும் மெஸ்ஸி! அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்கும் இன்டர் மியாமி (வீடியோ)
நியூ யார்க் ரெட் புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மெஸ்ஸியின் மிரட்டல் ஆட்டம்
அர்ஜென்டினா நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி, PSG அணியில் இருந்து அமெரிக்க அணியான இன்டர் மியாமியில் இணைந்ததில் இருந்து அந்த அணி வெற்றிகளை குவித்து வருகிறது.
? Debut en la MLS con gol ? pic.twitter.com/iYVVq73TIR
— Inter Miami CF (@InterMiamiCF) August 27, 2023
Red Bull Arena மைதானத்தில் நடந்த போட்டியில், இன்டர் மியாமி அணி நியூ யார்க் ரெட் புல்ஸ் அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் தியாகோ கோம்ஸ் அபாரமாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1-0 என மியாமி முன்னிலை வகித்தது.
Getty
மேஜிக் காட்டிய மெஸ்ஸி
அதன் பின்னரான இரண்டாம் பாதியில் ரெட் புல்ஸ் அணி மியாமிக்கு கடுமையாக நெருக்கடி கொடுத்தது. எனினும் 89வது நிமிடத்தில் மெஸ்ஸி வித்தை காட்டி மிரட்டலாக கோல் அடித்தார்.
Reuters
அதுவே வெற்றி கோலாகவும் மாறியது. இன்டர் மியாமி 2-0 என்ற கோல் கணக்கில் நியூ யார்க் ரெட் புல்ஸை வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து, 31ஆம் திகதி நடைபெற உள்ள நாஷ்வில்லே அணியை மியாமி எதிர்கொள்கிறது.
Only one goat ? can do that, see that pass na ?? beautiful football... Messi world best for a reason?? pic.twitter.com/XKlGEpfzrP
— precious (@preciou41173873) August 28, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |