முடிவுக்கு வரும் ஒப்பந்தம்: லியோனல் மெஸ்சியை அதிரடியாக இடைநீக்கம் செய்த PSG அணி
PSG அணி நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்படாத பயணம் ஒன்றை மேற்கொண்ட காரணத்தால் லியோனல் மெஸ்சியை அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது நிர்வாகம்.
இரண்டு வாரங்களுக்கு இடைநீக்கம்
PSG அணி நிர்வாகிகளின் வெளிப்படையான அனுமதியின்றி சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்ட மெஸ்ஸி இரண்டு வாரங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதாக பிரான்ஸ் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
@getty
இதனையடுத்து, Troyes அணியுடன் இந்த வார இறுதியிலும், Ajaccio அணியுடன் மே 13ம் திகதி நடக்கும் போட்டிகளில் மெஸ்ஸி களமிறங்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
PSG அணியுடன் 2021ல் போடப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நிலையில், PSG அணியில் இருந்து மெஸ்ஸி வெளியேறுவார் என்றே நம்பப்படுகிறது.
7 முறை Ballon d'Or விருது
மேலும், அவர் மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமான ஒரு அணியில் இணையலாம் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது. கால்பந்து விளையாட்டின் உயரிய விருதாக கருதப்படும் Ballon d'Or விருதை 7 முறை வென்றுள்ள லியோனல் மெஸ்சி சவுதி அரேபியாவின் சுற்றுலாத்துறை தூதுவராக நியமிக்கப்பட்டது தொடர்பாக அந்த நாட்டிற்கு பயணப்பட்டுள்ளார்.
I am happy to welcome #Messi and his family to Saudi to enjoy the magical tourist destinations and authentic experiences.
— Ahmed Al Khateeb أحمد الخطيب (@AhmedAlKhateeb) May 1, 2023
We welcome visitors from all around the world to experience a unique trip to Saudi Arabia and its hospitality. ??#WelcomeMessi pic.twitter.com/QQGdnAqQ08
திங்களன்று லோரியண்டிற்கு எதிராக PSG அணி தோல்வியடைந்த மறுநாள், உரிய அனுமதி பெறாமல் மெஸ்ஸி சவுதி அரேபியா பயணப்பட்டது அணி நிர்வாகத்தை நடவடிக்கை எடுக்க தூண்டியுள்ளது என்றே கூறப்படுகிறது.
@getty