AI தொழில்நுட்பம் மூலம் உருவான செய்தி வாசிப்பாளர் லிசா!
இந்தியாவில் முதல்முறையாக ஒடிசா மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மெய்நிகர் பெண் செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு
தற்போதைய காலத்தில் தொழில்நுட்பம் மூலம் நாடு பல வளர்ச்சிகளை அடைந்துள்ளது. தொழிநுட்பம் முன்னேறுவதற்கேற்ப நாமும் அதனுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் பல்வேறு துறைகள் பல வளர்ச்சிகள் அடைந்துள்ளன.
முதலில் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எந்திரவியல், சாப்ஃட்வேர் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
AI- ஆல் கிடைத்த ஆச்சரியம்
அமெரிக்காவில் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ரோபோ வக்கீல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், தனது உருவத்தை விர்ச்சுவலாக்கி அதன் மூலம் டேட்டிங் தளம் உருவாக்கி வாடிக்கையாளர்களை பேசி பழக வைத்து சம்பாதித்து வருகிறார்.
நியூயார்க்கில் உள்ள ஒரு பெண் ஒருபடி மேலே சென்று தனது கணவரை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி அதனுடன் பேசி வருகிறார்.
செய்தி வாசிப்பாளர் லிசா
இந்நிலையில், ஒடிசா மாவட்டத்தில் OTV என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மூலம் மெய்நிகர் செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ளது. இது, இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தி வாசிப்பாளர் லிசா கடினமான வார்த்தைகளை கூட திணறாமல் படிக்க கூடிய திறமை உடையவர். எழுதி கொடுத்தால் அதை அச்சு அசலாக படிக்கக் கூடியவர். முதற்கட்டமாக ஒடியா மற்றும் ஆங்கில மொழியில் பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
லிசா உருவானது எப்படி?
ஒடிசா தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணை அடிப்படையாக வைத்து செயற்கை நுண்ணறிவு மூலம் செய்தி வாசிப்பாளர் லிசா உருவாக்கப்பட்டது. அதாவது, லிசா அந்த பெண்ணை போல் அப்படியே உள்ளார்.
செயற்கை நுண்ணறிவு(AI) பற்றி தெரியாத ஒரு நபர் லிசா செய்தி வாசிப்பதை பார்த்தால் உண்மையான பெண் வாசிப்பது போல் தோன்றும். மேலும், இதன் மூலம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தனது பணியை செய்ய முடியும்.
Meet Lisa, OTV and Odisha’s first AI news anchor set to revolutionize TV Broadcasting & Journalism#AIAnchorLisa #Lisa #Odisha #OTVNews #OTVAnchorLisa pic.twitter.com/NDm9ZAz8YW
— OTV (@otvnews) July 9, 2023
இந்த மெய்நிகர் பெண் செய்தி வாசிப்பாளர் மூலம் பல வசதிகள் உள்ளன. இதனால், மனிதர்களின் வேலைக்கு பல்வேறு பிரச்சனைகள் வரும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருவது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறம் இதனால் எந்த ஆபத்தும் வராது என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |