ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் - யுவராஜ் சிங் முதல் அப்பாஸ் அப்ரிடி வரை
கிரிக்கெட்டில் அரிதாக சில வீரர்கள் மட்டும் ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் சிக்ஸர்கள் அடிப்பார்கள்.
அப்படியாக ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
கார்ஃபீல்ட் சோபர்ஸ்
மேற்கிந்திய தீவுகள் அணி வீரரான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ்(sir garfield sobers ), முதல் தர போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

1968 ஆம் ஆண்டில் மால்கம் நாஷுக்கு எதிரான முதல் தரப் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்தார்.
ரவி சாஸ்திரி
1985 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபி போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய ரவி சாஸ்திரி(Ravi Shastri), பரோடா அணிக்கு எதிரான போட்டியில், ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்தார்.

ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த உலகின் 2வது வீரர், முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஹெர்ஷல் கிப்ஸ்
தென் ஆப்பிரிக்கா வீரரான ஹெர்ஷல் கிப்ஸ்(Herschelle Gibbs), சர்வதேச போட்டிகளில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

2007 உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், கிப்ஸ் ஒரே ஓவரில் சிக்ஸர்கள் விளாசினார்.
யுவராஜ் சிங்

இந்திய வீரரான யுவராஜ் சிங்(Yuvraj Singh), 2007 ஐசிசி உலக டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராடு வீசிய ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்தார்.
கீரோன் போலார்ட்

மேற்கிந்திய தீவுகள் வீரரான கீரோன் போலார்ட்(Kieron Pollard), 2021 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் அகிலா தனஞ்சயா வீசிய ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசினார்.
திசர பெரேரா

இலங்கை வீரர் திசர பெரேரா(Thisara Perera), 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற லிஸ்ட் எ போட்டியில், ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து, முதல் இலங்கை வீரராக இந்த சாதனை பட்டியலில் இடம் பிடித்தார்.
ருதுராஜ் கெய்க்வாட்

விஜய் ஹசாரே டிராபி தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட்(Ruturaj Gaikwad ), உத்தரபிரதேச அணிக்கு எதிரான போட்டியில் ஷிவா சிங் வீசிய ஓவரில், 7 சிக்ஸர்கள்(நோ பால் உட்பட) அடித்து சாதனை படைத்தார்.
பிரியன்ஸ் ஆர்யா

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி ப்ரீமியர் லீக்கில், சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய பிரியன்ஸ் ஆர்யா(Priyansh Arya), நார்த் டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்தார்.
தீபேந்திர சிங் ஐரி

சர்வதேச டி20 தகுதிச் சுற்றில் நேபாள வீரர் தீபேந்திர சிங் ஐரி(Dipendra Singh Airee), கத்தாருக்கு எதிரான போட்டியில், கம்ரான் கான் வீசிய ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்தார்.
அப்பாஸ் அப்ரிடி

நேற்று நடைபெற்ற 2025 ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில், பாகிஸ்தான் வீரர் அப்பாஸ் அப்ரிடி(Abbas Afridi), குவைத்துக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |