குறைவான விலையில் Second Hand Bike வாங்க வேண்டுமா? Splendor முதல் Royal Enfield வரை
குறைவான விலையிலும், நல்ல தரத்திலும் இருக்க கூட செகண்ட் ஹேண்ட் பைக்குகளை பற்றிய பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்பிளெண்டர் பிளஸ் (Splendor Plus)
இந்தியாவில் பிரபலமாக இருக்கும் Splendor Plus பைக்கை இயக்குவது சுலபமான ஒன்று. புதிதாக பைக் வாங்கி பயன்படுத்த நினைக்கும் பலரும் கியர் பைக்கை வாங்க நினைத்தால் இந்த பைக்கை வாங்கலாம்.
மார்க்கெட்டில் இந்த பைக்கை செகண்ட் ஹேண்டில் வாங்க வேண்டுமென்றால் ரூபாய் 20 ஆயிரம் முதல் கிடைக்கும்.
ஹோண்டா சிபி யூனிகான் 150 (Honda CB Unicorn 150)
Honda CB Unicorn 150 பைக்கை செகண்ட் ஹேண்டில் வாங்கும்போது நமக்கு அதிக மைலேஜ் (mileage) கிடைக்கும். அதோடு நமக்கு பராமரிப்பு செலவும் குறைவாகவே இருக்கும். நீண்ட தூரம் பயணம் செய்யும் நபர்கள் இந்த பைக்கை தேர்வு செய்யலாம்.
பஜாஜ் பல்சர் 200 எஃப் (Bajaj Pulsar 200 F)
நல்ல பவர்ஃபுல் பைக்கை வாங்க நினைப்பவர்கள் Bajaj Pulsar 200 F பைக்கை தேர்வு செய்யலாம். பைக்கின் தரம் மற்றும் மற்ற விடயங்களை கவனித்து இந்த பைக்கை வாங்க வேண்டும்.
இதன் விலையும் குறைவு. முக்கியமாக cc tdsi engine நல்ல ரன்னிங்கை கொடுக்கும்.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 (TVS Apache RTR 160)
ஸ்போர்ட்டியான லுக் கொண்ட பைக்குகளை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் TVS Apache RTR 160 பைக்கை வாங்கலாம். அனைத்து சாலைகளிலும் ஓட்டுவதற்கு நல்ல ரைட்டிங் அனுபவத்தை தரும்.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350)
Royal Enfield Classic 350 பைக் தான் இளைஞர்களின் கனவு பைக்காகவே உள்ளது. இது விலை அதிகமாக இருப்பதால் பலரும் இதனை வாங்க தடுமாறுவார்கள். இந்த பைக்கை செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் ரூ.90 ஆயிரம் முதல் ரூ1.5 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |