இன்ஸ்டாகிராமில் கோடிகளை அள்ளும் பிரபலங்கள்! முதலிடத்தில் யார் தெரியுமா?
பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என பல துறைகளை சேர்ந்தவர்களும் மில்லியன் கணக்கில் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
பிரபலங்கள் சமூக ஊடகங்களில் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படம் அல்லது வீடியோவுக்கும் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது.
அந்த வகையில், அதிக பின்தொடர்பவர்கள் இன்ஸ்டாகிராமில் வைத்திருக்கும் பிரபலங்கள் மற்றும் அவர்களது வருமானம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
5.கைலி ஜென்னர் (Kylie Jenner)
அமெரிக்க நடிகையும், தொழிலதிபருமான இவரை 393 மில்லியன் நபர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள்.
27 வயதாகும் கைலி, ஒரு பதிவிற்கு 2.39 மில்லியன் டொலர் ஊதியமாக பெறுகிறார்.
இவர் 'Kylie Cosmetics' என்ற அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
4.டிவைன் ஜான்சன் (Dwayne Johnson)
WWEயில் ராக் என்ற பெயரில் அறிமுகமான டிவைன் ஜான்சன், ஹாலிவுட் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகனான வலம் வருகிறார்.
இவர் ஒரு பதிவிற்கு இந்திய மதிப்பில் ரூ.19 கோடி பெறுகிறார். இவரை 393 மில்லியன் நபர்கள் பின்தொடர்கிறார்கள்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த டிவைன் ஜான்சன் 'Seven Bucks Productions' என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3.செலீனா கோம்ஸ் (Selena Gomez)
பிரபல பாடகியும், நடிகையுமான செலீனா கோம்ஸ், இன்ஸ்டாகிராமில் 420 மில்லியன் followersஐ வைத்துள்ளார்.
இவரது ஒரு பதிவிற்கு 2.5 மில்லியன் டொலருக்கு மேல் கிடைக்கிறது. இவர் ஒரு எபிசோட் நடிப்பதற்கு 6 மில்லியன் டொலர்கள் ஊதியமாக பெறுகிறார்.
செலீனா கோம்ஸ் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2. லியோனல் மெஸ்ஸி (Lionel Messi)
பிரபல கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
மெஸ்ஸி '525 Rosario' என்ற நிறுவனத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவரை 504 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள்.
இவர் பதிவிடும் ஒரு பதிவிற்கு 2.6 மில்லியன் டொலர்கள் (ரூ.22 கோடி) ஊதியம் பெறுகிறார்.
1.கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo)
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் மற்றொரு கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியனோ ரொனால்டோதான்.
இவரை 653 மில்லியன் இன்ஸ்டாகிராம் Followers பின்தொடர்வதன் மூலம், ஒரு பதிவிற்கு 3.23 மில்லியன் டொலர்கள் (ரூ.27 கோடி) பெறுகிறார்.
கால்பந்தை தவிர விளம்பரங்கள், ஆடை வணிகம் போன்றவை வாயிலாகவும் ரொனால்டோ வருமானம் ஈட்டி வருகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |