நடிகைகளை திருமணம் செய்த இந்தியா கிரிக்கெட் வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா?
இந்தியாவில், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களை கடவுள் போல பாவித்து ரசிகர்கள் கொண்டாடுவார்கள். பல நடிகர்களுக்கு கோவில் கூட கட்டப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில், கிரிக்கெட் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் அது உலகளவில் அளவில் கவனம் பெரும்.
நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா
2013 ஆம் ஆண்டு முதல் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர்.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி, இத்தாலியில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு, அகாய், வாமிகா என 2 குழந்தைகள் உண்டு.
கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஷெட்டியும், கே.எல்.ராகுலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.
இவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
ஹர்பஜன் சிங் - கீதா பஸ்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், இங்கிலாந்தை சேர்ந்த கீதா பஸ்ரா என்ற நடிகையை கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.
கீதா பஸ்ரா, ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களில் நடித்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஹர்பஜன் சிங், தற்போது ராஜ்யசபா எம்.பி ஆக உள்ளார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளது.
யுவராஜ் சிங் - ஹேசல் கீச்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக வலம் வந்த யுவராஜ் சிங், ஹேசல் கீச் என்ற இங்கிலாந்து நடிகையை 2016 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.
ஹேசல் கீச், ஹாரிபாட்டர் தொடரில் நடித்துள்ளதோடு, தமிழில் பில்லா-2 படத்திலும் நடித்துள்ளார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளது.
ஜாகீர்கான் - சகரிகா காட்கே
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர்கான், சகரிகா காட்கே என்ற நடிகையை 2017 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.
‘சக் தே இந்தியா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த சகரிகா காட்கே, ஹிந்தி, மராத்தி, பஞ்சாபி மொழி படங்களில் நடித்துள்ளார்.
மன்சூர் அலி கான் பட்டோடி - ஷர்மிளா தாகூர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான மன்சூர் அலி கான் பட்டோடி, நடிகை ஷர்மிளா தாகூரை 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.
பிரபல நடிகர் சயீப் அலி கான் இந்த தம்பதியின் மகன் ஆவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |