சச்சின், கோலி, ரோஹித் இல்லை: லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த இந்திய வீரர்கள் யாரெல்லம் தெரியுமா?
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் விளாசிய இந்திய வீரர்கள் குறித்த பட்டியலை இங்கு காண்போம்.
லார்ட்ஸ் மைதானத்தில் சதம்
'கிரிக்கெட்டின் வீடு' என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
புகழ்பெற்ற இந்த மைதானத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய மூவரும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பதுதான் ஆச்சரியமான விடயம். ஆனால், இவர்களைத் தவிர பந்துவீச்சாளர் உட்பட 10 பேர் சதம் அடித்துள்ளனர்.
ராகுல் டிராவிட் (Rahul Dravid)
இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்படும் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், 2011ஆம் ஆண்டு லார்ட்ஸில் 103 ஓட்டங்கள் விளாசினார்.
சவுரவ் கங்குலி (Sourav Ganguly)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, இந்த மைதானத்தில் தனது அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் அடித்து மிரட்டினார். அவர் 1996யில் 131 ஓட்டங்கள் எடுத்தார்.
முகமது அசாருதீன் (Mohammad Azharuddin)
இந்திய அணியின் முன்னாள் வீரரான அசாருதீன், 1990ஆம் ஆண்டில் 121 ஓட்டங்கள் குவித்தார். இது அவரது சிறந்த இன்னிங்ஸ் ஆக பார்க்கப்படுகிறது.
அஜித் அகர்கர் (Ajit Agarkar)
முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அஜித் அகர்கர், டெஸ்டில் ஒரே ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். ஆனால் 2002யில் அவர் எடுத்த 109 ஓட்டங்கள் ட்விஸ்ட் இன்னிங்ஸ் ஆக அமைந்தது.
ரவி சாஸ்திரி (Ravi Shastri)
1990ஆம் ஆண்டில் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி 100 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து கண்டிஷனில் நிதானமாக 184 பந்துகளை எதிர்கொண்டு அவர் சிறப்பான இந்த சதத்தை பூர்த்தி செய்தார்.
திலீப் வெங்சர்க்கார் (Dilip Vengsarkar)
லார்ட்ஸ் மைதானத்தில் மூன்று முறை சதம் விளாசிய ஒரே இந்திய வீரர் திலீப் வெங்சர்க்கார்தான். இதனாலேயே இவர் 'Lord of Lord's' என்று அழைக்கப்படுகிறார். இவர் 1979யில் 103 ஓட்டங்களும், 1982யில் 157 ஓட்டங்களும், 1986யில் 126 ஓட்டங்களும் விளாசியுள்ளார்.
குண்டப்பா விஸ்வநாத் (Gundappa Vishwanath)
1979ஆம் ஆண்டில் இந்திய அணியின் நெருக்கடியான சூழலில் குண்டப்பா விஸ்வநாத் மிரட்டலாக 113 ஓட்டங்கள் குவித்தார்.
வினோ மன்கட் (Vinoo Mankad)
லார்ட்ஸில் ஓர் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் எடுத்த பெருமைக்குரியவர் வினோ மன்கட். இவர் 1952யில் 184 ஓட்டங்கள் விளாசியதுடன் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இங்கு முதல் சதம் அடித்த இந்திய வீரரும் இவரே.
அஜிங்க்யா ரஹானே (Ajinkya Rahane)
2014ஆம் ஆண்டில் கடுமையான துடுப்பாட்ட கண்டிஷனில் பிட்ச் இருந்தபோது, அஜிங்க்யா ரஹானே 103 ஓட்டங்கள் விளாசி இந்திய அணி சிறப்பான வெற்றி பெற வழிவகுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |