அதிகமுறை ஐசிசி கோப்பைகளை வென்ற அணித்தலைவர்கள் - ரோஹித்துக்கு எந்த இடம்?
ஐசிசி கோப்பைகளை அதிக முறை வென்ற அணித்தலைவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஐசிசி கோப்பைகள்
சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடருடன் அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் அதை மறுத்துள்ளனர்.
2028 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணியில் விளையாடி, தங்கப்பதக்கம் வெல்ல வேண்டுமென என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிக முறை ஐசிசி கோப்பைகளை வென்ற அணித்தலைவர்கள் குறித்து பார்க்கலாம்.
ரிக்கி பாண்டிங்
உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, டி20 உலகக் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய 4 தொடர்களை ஐசிசி நடத்தி வருகிறது.
இந்த பட்டியலில் 4 ஐசிசி கோப்பைகளை வென்று அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் முதலிடத்தில் உள்ளார்.
ரிக்கி பாண்டிங் தலைமையிலான அவுஸ்திரேலியா அணி, 2003 மற்றும் 2007 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2006 மற்றும் 2009 சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய 4 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது.
தோனி
இதனையடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் தோனி, 3 ஐசிசி கோப்பைகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
தோனி தலைமையிலான இந்திய அணி, 2011 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை, 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய 3 கோப்பைகளை கைப்பற்றியுள்ளது.
கிளைவ் லாய்டு தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, 1975 மற்றும் 1979 ஒரு நாள் உலக கோப்பையை வென்றுள்ளதால், அவர் இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.
ரோஹித் சர்மா
அதைத்தொடர்ந்து, டேரன் சமி தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, 2012 மற்றும் 2016 டி20 உலக கோப்பையை வென்றதால் இந்த பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளார்.
அடுத்ததாக, பேட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி, 2023 ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2021-23 டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்று, இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.
அதை தொடர்ந்து, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 2024 டி20 உலக கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் கோப்பையை வென்று, 6 வது இடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |