மர்மங்கள் நிறைந்த இந்திய குகைகளின் பட்டியல்.., முழு தகவல்கள்
இந்தியாவில் உள்ள மர்மங்கள் நிறைந்த குகைகள் எங்கு இருக்கிறது என்பது பற்றியும், அதனை பற்றிய தகவல்களையும் பார்க்கலாம்.
இந்திய குகைகள்
போரா குகைகள்
இந்திய மாநிலமான ஆந்திரா, விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு பள்ளத்தாக்கின் அனந்தகிரி மலைகளில் போரா குகைகள் அமைந்துள்ளது. இதன் உயரம் 800 முதல் 1,300 மீ ஆகும்.
150 ஆண்டுகால பழமையான இந்த குகையானது விசித்திரமான சுண்ணாம்பு வடிவங்களுக்கு பெயர் பெற்றது ஆகும். இந்த குகைகளுக்கு பல புராண கதைகள் இருக்கிறது.
அதாவது, இந்த குகையில் உச்சியில் நின்று மேய்ந்து கொண்டிருந்த பசு ஒன்று உள்ளே விழுந்தது. மாடு மேய்ப்பவர் பசுவைத் தேடும் போது குகைகளைக் கண்டுள்ளார். அப்போது, குகைக்குள் லிங்கம் போலவே ஒரு கல்லை கண்டுள்ளார்.
அப்போது அவர், இந்த சிவன் பசுவை பாதுகாத்தது என்று கூறியுள்ளார். இதனை நம்பியுள்ள அங்குள்ள கிராம மக்கள் குகைக்கு வெளியே கோயிலை கட்டி வழிபடுவதாக கூறப்படுகிறது.
பீம்பேட்கா குகைகள்
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், ராய்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்லியல் களம் மற்றும் உலகப் பாரம்பரியக் களமுமாகும்.
இங்குள்ள, பீம்பேட்கா பாறை வாழிடங்கள் வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியாவில் மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக அமைந்துள்ளது.
இங்குள்ள ஓவியங்கள் வரலாற்றுக்கு முந்தைய கால மக்களின் நடனம் மற்றும் வேட்டையாடுதல் முதலிய வாழ்க்கை முறையை தெரிந்துகொள்ள உதவுகிறது. இங்குள்ள தடயங்களும், அடையாளங்களும் இன்றும் பல மர்மங்களை கூறுவதாக சொல்லப்படுகிறது.
அமர்நாத் குகைகள்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் குகைகள் அமைந்துள்ளது. இங்கு ஒரு முக்கிய இந்துக் குடைவரை கோயில் உள்ளது.
இக்குகை 3,888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.
அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது.
உண்டவல்லி குகைகள்
இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசதம், குண்டூர் மாவட்டத்தில் உண்டவல்லி குகைகள் அமைந்துள்ளது. இந்த குகைகள் விஜயவாடாவிற்கு தென்மேற்கே, ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் நகரத்திற்கு வடகிழக்கே 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இது, குப்தா பாணியில் பாறையில் வெட்டப்பட்ட கட்டிடக்கலையில் செதுக்கப்பட்டுள்ளன. வியக்க வைக்கும் பாறை கட்டிடங்கள் இங்கு உள்ளன. பண்டைய இந்தியர்களின் கைவினை திறன் மற்றும் கலைத்திறனுக்கு சான்றாக இந்த இடம் உள்ளது.
எலிபண்டா குகைகள்
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பாய்த் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள காராப்புரி (Gharapuri) தீவில் எலிபண்டா குகைகள் அமைந்துள்ளன.
இங்குள்ள சிற்பங்களைத் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காக போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.
மேலும், இங்கிருக்கும் திரிமூர்த்தி சிலை எனப்படும் சிவன் சிலையின் மூன்று முகங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |