அதிவேக 50 T20 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் - 2வது இடத்தில் அபிஷேக் சர்மா; முதலிடத்தில் யார்?
அதிவேக 50 T20 சிக்ஸர்கள் அடித்த முதல் 5 வீரர்களை இந்த பதிவில் காணலாம்.
அபிஷேக் சர்மா சாதனை
இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில், இந்திய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில், இந்திய வீரர் அபிஷேக் சர்மா 37 பந்துகளில், 6 பவுண்டரி 5 சிக்ஸர்களுடன் 75 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன் மூலம், ஆசிய கோப்பை T20 வடிவத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதுவரை ஆசிய கோப்பையில், 5 போட்டிகளில் விளையாடி 17 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
இந்நிலையில், குறைந்த பந்துகளில் 50 T20 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளவர்கள் குறித்து பார்க்கலாம்.
பில் சால்ட்
இங்கிலாந்து வீரர் பில் சால்ட், 320 பந்துகளில் 50 சிக்ஸர்கள் அடித்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அபிஷேக் சர்மா
இந்திய வீரர் அபிஷேக் சர்மா, 331வது பந்தில் 50 சிக்ஸர்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளார்.
எவீன் லீவிஸ்
மேற்கிந்திய தீவுகள் வீரரான எவீன் லீவிஸ், 366 பந்துகளில் 50 சிக்ஸர்கள் அடித்து 3வது இடத்தில் உள்ளார்.
ஆண்ட்ரே ரஸ்ஸல்
மேற்கிந்திய தீவுகள் வீரரான ஆண்ட்ரே ரஸ்ஸல், 409வது பந்தில் 50 சிக்ஸர்கள் அடித்து 4வது இடத்தில் உள்ளார்.
சூர்யா குமார் யாதவ்
இந்திய வீரர் சூர்யா குமார் யாதவ், 512வது பந்தில் 50 சிக்ஸர்கள் அடித்து 5வது இடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |