மின்சார வாகன சந்தையில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வரக்கூடிய புதையல் கண்டுபிடிப்பு
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மின்சார வாகன உற்பத்தியில் விரைவில் புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
லித்தியம் இருப்பு
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஹெச்பிசிஎல்-இன் மாநாடு ஒன்றில் பேசுகையில், "மின்சார வாகன புரட்சியில் இந்தியா உலகிலேயே முன்னணி நாடாக மாறும்" என்று கூறியிருந்தார்.
அவர், இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் 6 மில்லியன் டன் லித்தியம் இருப்பையும் உறுதி செய்தார். இது இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதோடு, உள்நாட்டு EV பேட்டரி உற்பத்தியை விரைவுபடுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.
உலக அளவில் அவுஸ்திரேலியா, சீனா , சிலி, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் தான் அதிக அளவில் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலும் ஹாங்காங் மற்றும் சீனாவில் இருந்து தான் லித்தியம் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் உற்பத்தியும், பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவிற்குள்ளேயே லித்தியம் பிரித்து எடுத்து பேட்டரிகளை உற்பத்தி செய்தல் மிகவும் லாபகரமானதாக இருக்கும்.
ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ரியாசி மாவட்டத்தில் லித்தியம் இருப்புக்களுக்கான ஆரம்ப ஏலம், நவம்பர் 29, 2023 அன்று ஜி3 அளவிலான லித்தியம் ஆய்வுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் இரண்டு முறையும் ஒப்பந்தங்களை பெற நிறுவனங்கள் முன்வரவில்லை. போதுமான ஆய்வுத் தரவு இல்லாததை முதன்மைக் காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன.
இப்போது அடுத்த ஆறு மாதங்களுக்குள் G2 நிலைக்கு ஆய்வை முன்னேற்ற அரசு இலக்கு வைத்துள்ளது.
இருப்பினும், முழுமையான மற்றும் விரிவான ஆய்வுக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்திய அரசை பொறுத்தவரை லித்தியம் கையிருப்பை முறையாக கையாள வேண்டியது சவாலாக இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |