பெலாரஸில் இருந்து வந்த மர்ம பலூன்கள்: அவசர நிலையை பிரகடனம் செய்த ஐரோப்பிய நாடு
ஐரோப்பிய நாடான லிதுவேனியா அண்டை நாட்டின் அச்சுறுத்தல் காரணமாக அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.
மர்ம பலூன்கள் ஊடுருவல்
நேட்டோவின் உறுதியான உறுப்பினரும், உக்ரைனின் நெருங்கிய நட்பு நாடான லிதுவேனியா அவசரநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடாகவும், லிதுவேனியாவின் அண்டை நாடாகவும் இருக்கும் பெலாரஸில் இருந்து வரும் பலூன்கள் ஊடுருவலை தொடர்ந்து இந்த அவசர நிலை பிரகடனமானது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்கள் இந்த பலூன்கள் மூலம் சிகரெட்களை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல பயன்படுத்துவதாக கூறப்படுகிறது, அதே சமயம் இந்த பலூன்கள் மூலம் நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து பெரிதும் சீர்குலைந்ததை அடுத்து வில்னியஸ் விமானம் நிலையம் மூடப்பட்டுள்ளது.
பெலாரஸின் கலப்பின தாக்குதல்
லிதுவேனியா அதிகாரிகள் இதனை வெறும் கடத்தல் நடவடிக்கையாக மட்டும் பார்க்கவில்லை.

ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான பெலாரஸால் நடத்தப்படும் கலப்பினத் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
இந்த அதிகரிக்கும் அச்சுறுத்தல்களை தொடர்ந்து, நாட்டின் காவல்துறை, பாதுகாப்பு படையினர், எல்லை காவல் படையினர் இணைந்து செயல்பட அதிகாரங்களை வழங்கும் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் நாட்டின் உள்துறை அமைச்சர் விளாடிஸ்லாவ் கொண்ட்ரடோவிக் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |