வீர உக்ரைனிய நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில்... பிரபல நாட்டின் அதிபர் வெளியிட்ட முக்கிய பதிவு
வீர உக்ரைனிய நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் வரவேற்கப்படுவதற்கு தகுதி உடையது என்று லிதுவேனியா அதிபர் கிடானாஸ் நவுஸ்தா கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமூகவலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும். 5 மணி நேர விவாதங்களுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உக்ரைனின் ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கு சம்மதம் என்று தெரிவித்தனர்.
அதற்கான செயல்முறை தொடங்கியது. அதை விரைவாக நிறைவேற்றுவது நமக்கும், உக்ரைனுக்கும் முக்கியமானது.
வீர உக்ரைனிய நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் வரவேற்கப்படுவதற்கு தகுதி உடையது என்றார்.
உக்ரைனுக்குள் புகுந்து ரஷ்யா இரு வாரங்களை தாண்டி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் கிடானாஸின் இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.