உங்கள் கல்லீரல் கெட்டு போய்விட்டது என்பதை காட்டும் அறிகுறிகள்! உஷார்
கல்லீரல் கெட்டு போயுள்ளதை சில அறிகுறிகளை வைத்து அறிந்து கொள்ளலாம்.
கல்லீரல் பாதிப்பை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை நாடுவது நலம் பெயர்க்கும்.
மனித உடலில் மிக முக்கியமான உறுப்பாக கல்லீரல் உள்ளது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் முக்கிய பணியை கல்லீரல் தான் செய்கிறது.
கல்லீரல் சரியாக இயங்காவிட்டால் சில அறிகுறிகளை அதை வெளிக்காட்டி விடும்.
உங்கள் கல்லீரல் அபாயகரத்தை தொட்டுள்ளது என்பதை இந்த அறிகுறிதான் உறுதி செய்கிறது. கை மற்றும் கால்களின் பாதங்களில் சிவப்பாக இருந்தால் கல்லீரலில் ஏதேனும் நோய் வந்துள்ளது என்று அர்த்தம்.
timesofindia
கல்லீரல் பாதிப்புகளை உங்களின் நிறமே காட்டி கொடுத்து விடும். கண்களோ அல்லது தோலோ மஞ்சளாக இருந்தால் அது கல்லீரல் பிரச்சினைக்கான அறிகுறியாகும்.
கண்கள் அதிக வறட்சியாகவோ அல்லது வாய் வறட்சியாகவோ இருந்தால் அவை பல பாதிப்புகளை நமக்கு தருகின்றது. கண்ணில் இது போன்ற பாதிப்புகள் இருந்தால் அதற்கு கல்லீரல் பிரச்சினையும் ஒரு முக்கிய காரணமாகும். இதுவே நீண்ட நாட்கள் இருந்தால் அதிக பாதிப்பு உள்ளது என அர்த்தம்.
lifespan
மது பழக்கத்தால் உண்டாகும் கல்லீரல் நோயானது கல்லீரலை மட்டும் பாதிக்காது. மேலும் இது முழு உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும். வறண்ட தொண்டை, பசியின்மை, மஞ்சள் காமாலை, வாந்தி போன்றவை ஆரம்ப கால கல்லீரல் நோயின் அறிகுறிகள் ஆகும். இதன் பிறகு கல்லீரல் வீக்கத்தால் அடிவயிற்றில் வலி உண்டாகும்.
கல்லீரலை பாதுகாக்க மது பழக்கத்தை அவசியம் தவிர்க்க வேண்டும். மேலும் சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுகளை மூன்று வேளைகளும் சாப்பிடுவது நல்லது. மேலும் தினம்தோறும் உடற்பயிற்சி செய்து வந்தால் கல்லீரலுக்கு மட்டுமன்றி பல்வேறு நோய்களில் இருந்து உங்களை காத்து கொள்ளலாம்.
timesofindia