புது வருடத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த லிவர்பூல்! சூறையாடிய முகமது சாலா
பிரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி 4-2 என்ற கோல் கணக்கில் நியூகேஸ்லே அணியை வீழ்த்தியது.
முகமது சாலா
இங்கிலாந்தின் Anfield மைதானத்தில் லிவர்பூல் மற்றும் நியூகேஸ்லே அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடந்தது.
பரபரப்பாக தொடங்கிய இப்போட்டியில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை.
ஆனால் இரண்டாம் பாதியில் இருதரப்பில் இருந்தும் அடுத்தடுத்து கோல்கள் அடிக்கப்பட்டன. ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் நட்சத்திரம் முகமது சாலா கோல் அடித்தார்.
லிவர்பூல் வெற்றி
அதற்கு பதிலடியாக நியூகேஸ்லே வீரர் அலெக்ஸாண்டர் ஐசக் 54வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து லிவர்பூல் வீரர்கள் கர்டிஸ் ஜோன்ஸ் (74), கோடி காக்போ (78) கோல் அடித்தனர்.
ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் நியூகேஸ்லேலின் ஸ்வென் போட்மான் அபாரமாக கோல் அடித்தார். 86வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் முகமது சாலா கோல் அடிக்க, இறுதியில் லிவர்பூல் அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Twitter (@LFC)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |