கடைசி நிமிடங்களில் தலையால் முட்டி கோல் அடித்த ரொனால்டோ! அல் நஸர் இமாலய வெற்றி
அல் நஸர் அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் அல் டாவ்வுன் அணியை வீழ்த்தியது.
அல் டாவ்வுன் கோல்
கிங் அப்துல்லா ஸ்போர்ட் சிட்டி மைதானத்தில் நடந்த சவுதி புரோ லீக் தொடர் போட்டியில், அல் டாவ்வுன் அணியை எதிர்கொண்டது அல் நஸர்.
ஆட்டத்தின் 13வது நிமிடத்திலேயே அல் டாவ்வுன் (Al-Taawoun) வீரர் அஸ்ரப் எய் மஹ்டியோய் (Aschraf EI Mahdioui) அடித்த ஷாட்டை கோல் தடுத்தார். ஆனால் அவர் மீது பட்டு திரும்பி வந்த பந்தை அவரே வலைக்குள் தள்ளினார்.
அதனைத் தொடர்ந்து 26வது நிமிடத்தில் மார்செலோ ப்ரோஸோவிக் அசத்தலாக கோல் அடித்தார். அடுத்த 9 நிமிடங்களிலேயே ஐமெரிக் லபோர்டே (35வது நிமிடம்) கார்னர் கிக்கில் இருந்து வந்த பந்தை, மின்னல் வேகத்தில் தலையால் முட்டி அல் நஸருக்காக கோலாக மாற்றினார்.
Twitter (@Al-Nasser)
ரொனால்டோ தலையால் முட்டி கோல்
இதனால் முதல் பாதியில் 2 - 1 என்ற கோல் கணக்கில் அல் நஸர் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் அல் நஸர் அணிக்கு ஒடாவியோ மூலமாக மூன்றாவது கோல் கிடைத்தது.
Twitter (@Al-Nasser)
அல் நஸரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அல் டாவ்வுன் அணி திணறியது. கடைசி நிமிடங்களான 90+2யில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) அபாரமாக தலையால் முட்டி கோல் அடித்தார். இதன்மூலம் 2023யில் அவரது கோல் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்தது.
மேலும் அல் நஸர் அணி 4-1 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில நீடிக்கிறது.
Twitter (@Al-Nasser)
Twitter (@Al-Nasser)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |