ஏற்கனவே நிறைவேறிய நான்கு கணிப்புகள்... வாழும் நாஸ்ட்ராடாமஸ் வெளியிட்ட அறிக்கை
தனது கணிப்புகளில் பல இன்னும் நிறைவேற இருப்பதாக எச்சரித்துள்ள வாழும் நாஸ்ட்ராடாமஸ், 2024ல் ஏற்கனவே நான்கு கணிப்புகள் நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நான்கு சம்பவங்கள்
பிரேசில் நாட்டவரான 37 வயது Athos Salomé இதுவரை கணித்து வெளியிட்டுள்ள பல்வேறு தீர்க்கதரிசனங்கள் துல்லியமாக நிறைவேறியுள்ளது. வாழும் நாஸ்ட்ராடாமஸ் என பரவலாக அறியப்படும் இவர், கோவிட் பெருந்தொற்று, பிரித்தானிய ராணியாரின் மரணம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஊடுருவல் என கணித்தவை அனைத்தும் நிறைவேறியுள்ளது.
இந்த நிலையில், 2024ல் நிறைவேறவிருக்கும் சம்பவங்கள் தொடர்பில் அவர் கடந்த ஆண்டில் தமது கருத்தை பதிவு செய்திருந்தார். அதில் நான்கு சம்பவங்கள் நிறைவேறியுள்ளதாகவும், மேலும் பல நிறைவேற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதில், இன்னும் சில நாட்களில் ஒரு பெரிய சிறுகோள் பூமியை கடந்து செல்லும் என தற்போது NASA உறுதி செய்துள்ளதை, ஏற்கனவே வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார்.
ஜூலை 28ம் திகதி இது தொடர்பில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவு செய்துள்ள வாழும் நாஸ்ட்ராடாமஸ், செப்டம்பர் மாதம் NASA இந்த விவகாரத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அது நிறைவேறியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மைக்ரோசாப்ட் செயலிழப்பு தொடர்பில் வாழும் நாஸ்ட்ராடாமஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இது மோதலை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் அல்லது சைபர் போருக்கான காரணமாக அமையலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பேரழிவுகளை தவிர்க்க
மட்டுமின்றி, உலகம் இதனால் மூன்று நாட்கள் ஸ்தம்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் கணித்தது போலவே மூன்று நாட்கள் விமான சேவைகள் உட்பட இணையமூடாக முன்னெடுக்கப்படும் சேவைகள் அனைத்தும் செயலிழந்தது.
பிரித்தானியாவில் மட்டும் 50,000 விமானங்கள், தரையிறங்கவும் வெளியேறவும் முடியாமல் ஸ்தம்பித்தது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் போது சைபர் தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக எச்சரித்திருந்தார்.
மேலும், உலகளாவிய பேச்சுவார்த்தைகளால் மட்டுமே பேரழிவுகளை தவிர்க்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர் மூன்றாம் உலகப் போருக்கான வாய்ப்புகளையும் பேச்சுவார்த்தைகளால் தவிர்க்க முடியும் என்பதை குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ நாடுகள் மீது ரஷ்யாவின் மிரட்டலும், மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலும் அடுத்த கட்டத்திற்கு நகரும் வாய்ப்புகள் இருப்பதாகவே நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |