காட்டுத்தீ குறித்த ஜோதிட நிபுணரின் கணிப்பு பலித்தது: சிக்கல் தீரவில்லை என்கிறார் வாழும் நாஸ்ட்ரடாமஸ்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ பற்றியெரிந்துகொண்டிருக்கும் நிலையில், அது குறித்து தான் ஏற்கனவே கணித்ததை நினவுகூர்ந்துள்ளார் வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் ஜோதிடக்கலை நிபுணர்.
ஜோதிட நிபுணரின் கணிப்பு பலித்தது
வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் ஏதோஸ் என்னும் பிரேசில் நாட்டவரான ஜோதிடக்கலை நிபுணர், 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே, 2024 துவங்கி உலகம் தீ தொடர்பான பேரழிவுகளை எதிர்கொள்ளும் என கணித்துள்ளார்.
அதுவும், குறிப்பாக, கலிபோர்னியா மாகாணம் பாதிக்கப்படும் என்றே கணித்திருந்தார் அவர்.
தற்போது காட்டுத்தீயால் பற்றியெரிந்துகொண்டிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம், கலிபோர்னியா மாகாணத்தில்தான் உள்ளது.
விடயம் என்னவென்றால், பிரச்சினை இன்னும் தீரவில்லை என்கிறார் ஏதோஸ்.
2025இல் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் மேலும் சில நிகழ்வுகள் நிகழும் என்றும் அவை மனித வாழ்வையே பெருமளவில் மாற்றும் வகையில் இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார் ஏதோஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |