மரபணு மாற்ற மனிதர்கள் என்னும் பயங்கர விடயம்... வாழும் நாஸ்ட்ரடாமஸ் எச்சரிக்கை
மரபணு மாற்ற மனிதர்கள் என்னும் விடயம், இந்த ஆண்டில் உண்மை ஆக இருப்பதாக எச்சரித்துள்ளார் ஜோதிடக்கலை நிபுணர் ஒருவர்.
மரபணு மாற்ற மனிதர்கள்...
எலிசபெத் மகாராணியின் மரணம் முதல் எலான் மஸ்க் ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள் வரை பல விடயங்களை துல்லியமாக கணித்தவர், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பிரபல ஜோதிடக்கலைஞரான ஏதோஸ் (Athos Salomé).
பிரேசில் நாட்டவரான ஏதோஸ், தற்போது மரபணு மாற்ற மனிதர்கள் என்னும் விடயம், இந்த ஆண்டில் நடைமுறையில் உண்மை ஆக இருப்பதாக எச்சரித்துள்ளார்.
ஜப்பான் அரசாங்கம், ஏற்கனவே மனித, விலங்கு மரபணு மாற்ற கருமுட்டைகளில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
இந்த மரபணு மாற்ற மனிதர்களால், குறிப்பாக இரண்டு பிரச்சினைகள் உருவாகும் என்கிறார் ஏதோஸ்.
ஒன்று, இந்த மரபணு மாற்ற மனிதர்கள், சாதாரண மனிதர்களைவிட மருத்துவ ரீதியில் மேம்பட்டவர்களாக இருப்பார்கள்.
ஆக, ஜப்பானிடம் இந்த மனிதர்கள் இருப்பதால், அந்நாட்டுக்கு மற்ற நாடுகளை விட அனுகூலம் அதிகமாக இருக்கும் என்கிறார் ஏதோஸ்.
அதாவது, மரபணு மாற்ற முறையில் மேம்பட்ட மனிதர்களைக் கொண்ட நாடுகள் வலிமையானவையாகவும், அவை இல்லாத நாடுகள் மற்றும் சாதாரண மனிதர்கள் வலிமையில்லாதவர்களாகவும் காணப்படும் சமநிலையற்ற ஒரு சமுதாயம் உருவாகிவிடக்கூடும் என எச்சரிக்கிறார் ஏதோஸ்.
இரண்டாவதாக, உண்மையான மனிதர்கள் என்பவர்கள் யார் என்னும் தார்மீக சிக்கல் உருவாகும் என்கிறார் ஏதோஸ்.
மரபணு மாற்ற முறையில் ஆய்வகங்களில் உருவாக்கப்படும் உயிரினங்கள், மனிதன் என்னும் அடிப்படை விடயத்துக்கே சவாலை ஏற்படுத்தும். உடலில் மனித செல்கள் இருப்பதால் மட்டும் ஒரு உயிரினம் மனிதனாகிவிட முடியுமா?
ஆக, ஆய்வகங்களில் மரபணு மாற்ற முறையில் உருவாக்கப்படும் கலப்பின கருமுட்டைகள் உயிரினங்களாக மாறுவதால், ஒழுங்கான உருவமில்லாத, எந்த இனம் என்றே வகைப்படுத்த முடியாத ஒன்றுதான் உருவாகும் என்கிறார் ஏதோஸ்.
மனித இனத்துக்கே சவால் விடும் இந்த பயங்கர விடயம் குறித்த ஏதோஸின் கணிப்பு பலிக்குமா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |