ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும்? பிரபல ஜோதிடக்கலை நிபுணர் கருத்து
கோவிட், எலிசபெத் மகாராணியாரின் மரணம் போன்ற விடயங்களை துல்லியமாக கணித்ததால், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படுபவர் பிரபல ஜோதிடக்கலை நிபுணரான ஏதோஸ் சலோமே.
இந்நிலையில் ஈரான் போர் குறித்து சில கணிப்புகளைத் தெரிவித்துள்ளார் ஏதோஸ்.
ஈரான் போர் எப்போது முடிவுக்கு வரும்?
ஏதோஸ், ஈரான் போர் இப்போதைக்கு முடிவடையாது என்று கூறியுள்ளார். மாறாக, அது ஒருவகையான தொழில்நுட்ப ஆக்கிரமிப்பாக மாறிவருகிறது என்று கூறியுள்ளார் அவர்.

அத்துடன், ஈரான் ராணுவத்தை ஊடுருவும் எண்ணம் எதுவும் அமெரிக்காவுக்கு இல்லை என்று கூறியுள்ள ஏதோஸ், மாறாக, அது, ஈரானின் ஏற்றுமதித் திறனை செயலிழக்கவைக்க வகைபார்க்கிறது என்றும், விலை குறைக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் சீனாவை மீண்டும் சென்றடைய விடாமல் தடுப்பதை உறுதி செய்ய முனைகிறது என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்கா, சீனாவின் எரிசக்தி வழங்கலுக்கு ஆதாரத் தூண்களாக நிற்கும் மூன்று முக்கிய நாடுகளுக்கு எதிராக காய் நகர்த்துவதாகவும் தெரிவிக்கிறார்.
புவிஅரசியல் சதுரங்கத்தில், ஈரான் (உடனடி இலக்கு), வெனிசுலா (பிடிபட்ட காய்) மற்றும் ரஷ்யா (உண்மையான காரணி) ஆகிய மூன்று நாடுகளுமே அந்த மூன்று தூண்கள் என்கிறார் ஏதோஸ்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |