கட்டார் கால்பந்து இறுதிப் போட்டியில் இந்த இரு நாடுகள்... கொரோனா பரவும் என கணித்தவர் ஆருடம்
கொரோனா பரவல் மற்றும் பிரித்தானிய ராணியாரின் மறைவு தொடர்பில் முன்னரே கணித்த பிரேசில் நாட்டவர் தற்போது கட்டார் உலகக் கிண்ணம் கால்பந்து தொடர்பில் முக்கிய ஆருடம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
யார் தகுதி பெறுவார்கள்
கட்டார் உலகக் கிண்ணம் கால்பந்து திருவிழாவானது நவம்பர் 20ம் திகதி துவங்க இருக்கிறது. உலகெங்கிலும் இருந்து மொத்தம் 32 அணிகள் மோதும் இந்த கால்பந்து திருவிழாவானது டிசம்பர் 18ம் திகதி நிறைவு பெறும்.
@getty
இந்த நிலையில், கால்பந்து இறுதிப் போட்டியில் யார் தகுதி பெறுவார்கள் என பிரேசில் நாட்டு வாழும் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் Athos Salome முக்கிய ஆருடம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், ஐந்து அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நிலையில் இருப்பதாகவும், அதில் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா
கட்டார் உலகக் கிண்ணம் கால்பந்து போட்டிகளில் அர்ஜென்டினா, பிரேசில், பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என Athos Salome கணித்துள்ளார்.
@getty
இதில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் எனவும் அவர் கணித்துள்ளார்.
மட்டுமின்றி, இன்னொரு முறை கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், மொத்தத்தில் அனைத்தும் தலைகீழாக மாறலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளர்.