இளவரசர் ஹரிக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து... ஜோதிடக்கலை நிபுணரின் எச்சரிக்கை
இளவரசர் ஹரி ஒரு பயங்கர ஆபத்தை எதிர்கொள்ள இருப்பதாக பிரபல ஜோதிடக்கலை நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
ஹரியின் வாழ்வில் ஆறு முக்கிய நிகழ்வுகள்
வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பிரபல ஜோதிடக்கலை நிபுணரான ஏதோஸ் (Athos Salomé), ஹரி தன் வாழ்வில் சந்திக்கவிருக்கும் ஆறு முக்கிய விடயங்கள் குறித்து கணித்துள்ளார்.
பாதுகாப்பு தொடர்பில் ஆபத்து
ஜூலை முதல் செப்டம்பர் வகையிலான காலகட்டத்தில், மனிதநேய நிகழ்வொன்றில் கலந்துகொள்ள செல்லும் இளவரசர் ஹரிக்கு பாதுகாப்பு தொடர்பில் ஆபத்து ஒன்று ஏற்பட இருப்பதாக எச்சரித்துள்ளார் ஏதோஸ்.
என்றாலும், அந்த ஆபத்திலிருந்து ஹரி தப்பிவிடுவார் என்றும், அதே நேரத்தில், அவரது பாதுகாப்பு குறித்து மக்கள் குரல் கொடுக்கும் அளவுக்கு அந்த சம்பவம் பயங்கரமானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் ஏதோஸ்.
மன்னருடன் சமரசம்
இளவரசர் ஹரிக்கும் அவரது தந்தையான மன்னர் சார்லசுக்கும் சமரசம் ஏற்படும் என்று கூறியுள்ள ஏதோஸ், என்றாலும், அது கமெராக்களின் கண்களில் படாமல், தனிப்பட்ட முறையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்படும் சமரசமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அந்த சமரசத்தின் பின்னால், மன்னரின் உடல் நிலை காரணமாக இருக்கும் என்று கூறியுள்ள ஏதோஸ், என்றாலும், ஹரியின் அண்ணனான வில்லியம் தம்பியிடமிருந்து விலகியே இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
ஒரு கசப்பான உண்மை
ஹரி மேகன் குடும்பத்தில் வேலை செய்த ஒரு ஊழியர், தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தக்கூடிய ஆவணங்களையும், பதிவு செய்யப்பட்ட சில தகவல்களையும் விரைவில் வெளியிட இருப்பதாக கூறியுள்ள ஏதோஸ், அவை, இளவரசர் ஹரி மீதான பச்சாதாப அலையை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், அவை ஹரியின் மனைவியான மேகனுடைய பெயருக்கு அழிக்க முடியாத கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்றும் ஏதோஸ் கூறியுள்ளார்.
ஹரியின் life mission
ஹரி, முன்னாள் போர் வீரர்களுக்கான திட்டம் ஒன்றைத் துவக்க இருப்பதாக தெரிவித்துள்ள ஏதோஸ், அது ஹரியின் life missionஆக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அந்த திட்டத்துக்கு மன்னருடைய மறைமுக ஆதரவு கிடைக்கும் என்றும், அது இருவருடைய சமரசத்தின் துவக்கமாக இருக்கும் என்றும் ஏதோஸ் கூறியுள்ளார்.
அமெரிக்காவை விட்டு வெளியேறும் ஹரி
ஹரி அமெரிக்காவில் தன் குடும்பம் வாழும் கலிபோர்னியாவை விட்டு வெளியேற இருப்பதாக தெரிவிக்கும் ஏதோஸ், தென்னாப்பிரிக்கா அல்லது நியூசிலாந்தில் தனது புதிய வாழ்வைத் துவக்குவார் என்று கூறியுள்ளார்.
வாழ்வை மாற்றும் மற்றொரு புத்தகம்
ஹரி மீண்டும் ஒரு புத்தகத்தை எழுதிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள ஏதோஸ், அது அவரது முந்தைய புத்தகமான ஸ்பேர் எனும் புத்தகத்தைப் போலிருக்காது என்றும், அது 2027இல் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
ஒரு ராஜ குடும்ப உறுப்பினராக இல்லாமல், ஒரு தனி மனிதனாக, அந்த புத்தகம் அவருக்கு உலக அளவில் மரியாதையை மீட்டுத்தரும் என்கிறார் ஏதோஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |