தேர்தல் தோல்வி குறித்து கமலா ஹரிஸை எச்சரிக்க முயன்ற ஜோதிடக் கலைஞர்: எழுப்பும் சந்தேகம்
வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் ஜோதிடக்கலைஞர் ஒருவர், தேர்தல் தோல்வி குறித்து கமலா ஹரிஸை எச்சரிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.
கமலா ஹரிஸை எச்சரிக்க முயன்ற ஜோதிடக் கலைஞர்
எதிர்காலத்தில் உலகில் நிகழவிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை துல்லியமாக கணிப்பதால் வாழும் நாஸ்ட்ரடாமஸ் என பெயர் பெற்றவர் ஜோதிடக்கலைஞரான ஏதோஸ் (Athos Salomé, 38).
ஏதோஸ், அமெரிக்க தேர்தல் தொடர்பில், தோல்வி குறித்து தான் கமலா ஹரிஸை எச்சரிக்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தேர்தலில் யார் வெற்றி பெறப்போகிறார் என்று தான் நேரடியாக கூறவில்லை என்றாலும், அமெரிக்கா, சிதறலின் விளிம்பில் நிற்கும் நிலை உருவாகும் என தான் கூறியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், கமலா ஹரிஸின் வெற்றி, மோசமான பின்விளைவுகளை உருவாக்கியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆக, யார் வெற்றி பெறுவார் என்பதைவிட, யாருடைய தலைமைத்துவத்தின் தாக்கம், அமெரிக்கா மற்றும் உலகின் நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும் என்பதற்கே தான் முக்கியத்துவம் அளித்ததாக தெரிவித்துள்ளார் ஏதோஸ்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி, 2024ஆம் ஆண்டைக்குறித்த ஒரு புகைப்படத்தை வெளியிட்ட ஏதோஸ், 2024ஐச் சுற்றிலும் ட்ரம்புடைய புகைப்படம் மற்றும் சில நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அது, ட்ரம்பின் தேர்தல் வெற்றியைக் குறித்ததுதான் என்கிறார்கள் ஏதோஸை பின்தொடர்பவர்கள்.
எழுப்பியுள்ள சந்தேகம்
இதற்கிடையில், பொதுவாக அமெரிக்க தேர்தலில் பல மாகாண தேர்தல் முடிவுகள் வெளியாகி, அவை எல்லாவற்றையும் கருத்தி கொண்டு முடிவெடுக்க வேண்டியிருக்கும் என்பதால், யார் ஜனாதிபதி என்பதை முடிவு செய்ய பல நாட்கள் ஆகும்.
(ஜோ பைடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் அப்படித்தான் ஆனது).
ஆனால், இம்முறை, தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரத்திலேயே ட்ரம்பின் வெற்றி குறித்த முடிவு வெளியாகிவிட்டது எப்படி என்னும் ரீதியில் சந்தேகம் எழுப்பியுள்ளார் ஏதோஸ்.
மேலும், கோடீஸ்வரர்கள், சமூக ஊடக பிரபலங்களின் தலையீடும் ட்ரம்பின் வெற்றியை சர்ச்சைக்குரியதாக்கியுள்ளது என்கிறார் அவர்.
அத்துடன், எதிர்வரும் சவால்கள் குறித்து கமலா ஹரிஸுடைய அணியினரை தான் எச்சரிக்க முயன்றதாகவும், ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார் ஏதோஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |