ருத்ர தாண்டவமாடிய லிவிங்ஸ்டன்! கடைசி பந்தில் 1 ரன்னில் த்ரில் வெற்றி
அபுதாபியில் நடந்த ILT20 போட்டியில், அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் டெஸெர்ட் வைப்பர்ஸை வீழ்த்தியது.
லிவிங்ஸ்டன் ருத்ர தாண்டவம்
முதலில் ஆடிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் குவித்தது.
லியாம் லிவிங்ஸ்டன் (Liam Livingstone) 48 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் விளாசினார்.
அலிஷான் 39 ஓட்டங்களும், ரூதர்போர்டு 24 (14) ஓட்டங்களும் எடுத்தனர். லோக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 
பின்னர் களமிறங்கிய டெஸெர்ட் வைப்பர்ஸ் அணியில் மேக்ஸ் ஹோல்டன் (Max Holden) 43 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசினார்.
அடுத்து பஹர் ஜமான் 32 பந்துகளில் 44 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 4 பவுண்டரிகள்) ஓட்டங்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.
1 ரன் வித்தியாசத்தில் வெற்றி
அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தன்வீர் அதிரடி காட்டினார். அவர் 9 பந்துகளில் 16 ஓட்டங்கள் விளாசினார்.
கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், பைஸ் மூலம் ஒரு ரன் மட்டுமே கிடைக்க அபுதாபி அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆந்த்ரே ரஸல், அஜய் குமார் தலா 2 விக்கெட்டுகளும், ஹோல்டர் மற்றும் ஸ்டோன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Maximum applause for Max Holden! 👏👏
— International League T20 (@ILT20Official) December 16, 2025
A beautifully timed knock of 5️⃣2️⃣ off the bat of Max Holden has the Desert Vipers firmly in command of the chase. 🙌#DPWorldILT20 #AllInForCricket #WhereTheWorldPlays pic.twitter.com/vFX2bUrvVZ
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். https://www.whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q |