உக்ரைனில் மீண்டும் அமையும் பிரித்தானிய துதரகம்: லிஸ் டிரஸ் வரவேற்பு!
பிரித்தானியாவிற்கான உக்ரைன் துதராக மெலிண்டா சிம்மன்ஸை தலைநகர் கீவ்-வில் மீண்டும் பிரித்தானிய அரசாங்கம் நியமித்துள்ளது.
ரஷ்ய உக்ரைன் இடையிலான போர் பதற்றம் காரணமாக பிரித்தானியா, அமெரிக்கா, இத்தாலி மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தங்களது துதரகங்களை உக்ரைனில் இருந்து வெளியேற்றினர்.
ஆனால் தற்போது உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 67வது நாளாக தொடரும் நிலையில், ரஷ்ய ராணூவத்தின் தாக்குதலானது கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளை நோக்கி திசை திரும்பியுள்ளது.
Great to have our fantastic ambassador @MelSimmonsFCDO back in Kyiv. ???? https://t.co/jPVXptvSYG
— Liz Truss (@trussliz) April 30, 2022
இதனால் இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளும், சில ஐரோப்பிய நாடுகளும் தங்களது துதரகத்தை உக்ரைனில் மீண்டும் நிறுவத்தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில் தற்போது, பிரித்தானியாவும் தங்களது துரக அதிகாரியை உக்ரைன் தலைநகர் கீவ்-வில் பணியமர்த்தியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: உணவு பொருள்கள் தீரப்போகிறது: உக்ரைன் கோரிக்கையை நிராகரித்த ரஷ்யா!
[
இதுகுறித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சர், லிஸ் டிரஸ் (Liz Truss), பிரித்தானியாவிற்கான உக்ரைன் துதராக நியமிக்கப்பட்டுள்ள மெலிண்டா சிம்மன்ஸை (Melinda Simmons) மேற்கோளிட்டு, கீவ்-வில் எங்களுக்கான அருமையான தூதராக இருப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.