உணவு பொருள்கள் தீரப்போகிறது: உக்ரைன் கோரிக்கையை நிராகரித்த ரஷ்யா!
உக்ரைனின் மரியுபோல் இரும்பு ஆலைக்குள் பதுங்கி இருக்கும் பொதுமக்களை வெளியேற்ற உக்ரைன் முன்வைத்த கோரிக்கையை ரஷ்ய நிராகரித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரில் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்ற தவறியதை அடுத்து, தற்போது உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் ரஷ்ய ராணுவம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
அந்தவகையில், உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரான மரியுபோலை ரஷ்ய ராணுவம் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதில் தற்போது அந்த நகரின் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையை தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளையும் ரஷ்ய ராணுவம் தங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
⚡️ Podolyak: Ukraine seeks Mariupol evacuation, Russia rejects proposals.
— The Kyiv Independent (@KyivIndependent) April 30, 2022
Mykhailo Podolyak, advisor to the Ukrainian president’s office, said Russia is unwilling to allow a humanitarian corridor from Mariupol.
“It is symbolic for them to destroy Mariupol and Azov fighters.”
மேலும் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் 2000 உக்ரைன் ராணுவ வீரர்களும் 1000 உக்ரைனிய பொதுமக்களும் பதுங்கி இருப்பதால் அதனையும் தற்போது ரஷ்ய ராணுவம் சுற்றிவளைத்துள்ளனர்.
கிட்டதட்ட இரண்டு வாரங்களாக ரஷ்ய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு இருப்பதால், அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களின் தேவைகளின் தட்டுபாடு எற்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருள்களின் தட்டுபாட்டை கருத்தில் கொண்டு பொதுமக்களை மீட்க உக்ரைன் அரசு செய்த முயற்சிகளும் ரஷ்ய ராணுவத்தால் முறியடிக்கபட்டது.
இந்த நிலையில், உக்ரைனின் மரியுபோல் இரும்பு ஆலைக்குள் பதுங்கி இருக்கும் பொதுமக்களை வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டும் என உக்ரைன் வைத்த கோரிக்கையை ரஷ்ய மறுத்துள்ளது.
இதுகுறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் ஆலோசகர் மைக்கைலோ போடோலியாக், உக்ரைனின் மரியுபோலில் இருந்து பொதுமக்களை மனிதாபிமானத்தின் அடிப்படையில் வெளியேற்ற ரஷ்யா விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய வீரர்கள் மீது குண்டு மழை பொழிந்த உக்ரைன்: பரபரப்பு வீடியோ ஆதாரம்
மேலும், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை மரியுபோல் மற்றும் அசோவ்வில் பதுங்கி இருக்கும் வீரர்களை முழுவதுமாக அழிக்க நினைப்பதாக தெரிகிறது எனவும் தெரிவித்துள்ளார்.