ரஷ்ய வீரர்கள் மீது குண்டு மழை பொழிந்த உக்ரைன்: பரபரப்பு வீடியோ ஆதாரம்
கிழக்கு உக்ரைனின் இசியம் திசையில் உள்ள ரஷ்ய ராணுவத்தின் கட்டுபாட்டு மையத்தின் மீது உக்ரைன் ராணுவம் குண்டு மழைகளை பொழிந்து அழித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷ்ய ராணுவம் கைப்பற்ற தவறியதை அடுத்து, தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதியான டான்பாஸை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் இறங்கியுள்ளது.
ரஷ்ய ராணுவத்தின் இந்த திட்ட மாற்றத்திற்க்கும் உக்ரைன் ராணுவம் தற்போது பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது.
அந்தவகையில், உக்ரைன் போரில் இசியம் (Izyum)திசையில் உள்ள ரஷ்ய ராணுவத்தின் கட்டுபாட்டு புள்ளியில் உக்ரைன் ராணுவம் இன்று குண்டு மழையை பொழிந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
?Ворожий пункт управління, більше 30 одиниць техніки, з яких понад половина танків та місце проживання особового складу противника на Ізюмському напрямку було знищено завдяки філігранній роботі воїні #НГУ та #ЗСУ.https://t.co/QI86RkJQiwhttps://t.co/SBQltMr4bM pic.twitter.com/Vc8BwbmJOE
— НГУ (@ng_ukraine) April 30, 2022
இந்த தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தின் 30க்கும் மேற்பட்ட ராணுவ யூனிட் உபகரணங்கள், பாதிக்கும் மேற்பட்ட டாங்கிகள் மற்றும் எதிரிகளின் குடியிருப்பு பகுதிகள் அகியவற்றை ஏவுகணைகள் கொண்டு அழித்து இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: நான் பாதுகாப்பாக இருப்பேனா? ரஷ்ய ராணுவத்திடம் பிடிபட்ட பிரித்தானிய வீரர் கேள்வி!
மேலும் இதுதொடர்பான வீடியோ ஆதாரத்தையும் உக்ரைன் அரசாங்கம் அதன் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.