பாலியல் வழக்கில் எம்.பி கைது....இது நமது அரசியல் கலாச்சாரத்தின் பிரச்சனை: லிஸ் டிரஸ் கருத்து!
பாலியல் அத்துமீறலுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டு இருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக இருக்கிறது என பிரித்தானிய வெளியுறவுத் துறை செயலாளர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் அடையாளம் சொல்லப்படாத கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கற்பழிப்பு சந்தேகத்தின் பேரில் கடந்த செவ்வாய் கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகிக்கப்படும் 50 வயதிற்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை, அத்துமீறிய தாக்குதல், நம்பிக்கை துஷ்பிரயோகம் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தை ஆகியவற்றின் கிழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சந்தேகிக்கப்படும் எம்.பி-யை கன்சர்வேடிவ் கட்சி நிர்வாகம் நாடாளுமன்ற அலுவலகத்தில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், பாலியல் வன்கொடுமை தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டு இருப்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது என பிரித்தானிய வெளியுறவுத் துறை செயலாளர் லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
Sky News செய்தி நிறுவனத்திற்கு லிஸ் டிரஸ் அளித்த பேட்டியின் போது இதனை தெரிவித்துள்ளார், அத்துடன் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை வெளியிடாமல் பேசிய லிஸ் டிரஸ், இந்த குற்றச்சாட்டு அறிக்கைகள் தொடர்பாக தான் அதிக அக்கறை கொண்டு இருப்பதாகவும், ஆனால் இது காவல்துறை சம்பந்தப்பட்ட விவகாரம் எனவும் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை தொடர்பாக சந்தேகிக்கப்படும் எம்.பி-யை நாடாளுமன்ற அலுவலகத்தில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது, ஆனால் அவர் இன்னமும் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் சுதந்திரமாக நுழைய வாய்ப்பு இருக்கிறது என்பதே எனது புரிதல் என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு; பிரித்தானியாவில் 40 ஆண்டுகள் இல்லாத பணவீக்கம்: உச்சத்தை தொடும் வாழ்க்கை செலவு நெருக்கடி
மேலும் இதுவே நமது அரசியல் கலாச்சாரத்தில் இருக்கும் பிரச்சனை எனவும் தெரிவித்துள்ளார்.