செய்தித் தொடர்பாளர் கருத்துக்கு மாற்றாக லிஸ் டிரஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு: அடுத்தடுத்து அறிவிப்புகளால் ஏற்பட்ட குழப்பம்
பிரதமர் லிஸ் டிரஸ் அடுத்த பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியை வழிநடத்துவார் என செய்தித் தொடர்பாளர் அறிவிப்பு.
சில மணி நேரத்தில் அறிவிப்புக்கு மாற்றாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் லிஸ் டிரஸ்.
பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் அடுத்த பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியை வழிநடத்துவார் என அவரது செய்தி தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்து இருந்த நிலையில், திடீரென தனது பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்துள்ளதால் பிரித்தானிய அரசியலில் குழப்பும் ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அறிவிக்கப்பட்ட வரி தள்ளுபடிகளால் மோசமாக இருந்த பிரித்தானிய பணவீக்கம் மேலும் சரிவை சந்திக்க தொடங்கியது.
இதனால் பிரதமர் லிஸ் டிரஸ் உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அவரது சொந்த டோரி எம்.பிக்களே கருத்து தெரிவிக்க தொடங்கியதை அடுத்து, பிரித்தானியாவில் நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமையான இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் லிஸ் டிரஸ் செய்தி தொடர்பாளர், பிரித்தானியாவின் அடுத்த பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியை வழிநடத்துவார் என தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள் தற்போதைய சூழ்நிலை மற்றும் குடியேற்றம் பற்றிய கருத்து வேறுபாடுகள் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்தில், முந்தைய நாள் டிரஸுக்கு கடினமாக இருந்ததாகவும், அவர் ஏற்கனவே நம்பிக்கைத் தீர்மானத்தை எதிர்கொண்டாரா என்பதில் தவறான தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் பிரதமர் இதை ஒரு பிரச்சினையாக எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறார் என்பதை நீங்கள் பார்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன். மேலும் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற நிலைக்கு சமநிலையை எவ்வாறு அமைப்பது என்பதை லிஸ் டிரஸ் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு; லண்டன் சாலையில் கத்தியால் குத்தப்பட்ட இளம்பெண்: நாற்காலியை கொண்டு பாதுகாத்த பொதுமக்கள்
கட்சியின் நம்பிக்கை வாக்கெடுப்பை மேற்பார்வையிடும் டோரிஸ் 1992 கமிட்டியின் தலைவரான சர் கிரஹாம் பிராடியை டிரஸ் சந்திக்க உள்ளார் என்பதையும் செய்தித் தொடர்பாளர் வெளிபடுத்தி இருந்தார்.
இதற்கிடையில் திடீரென பிரித்தானிய பிரதமர் பதவி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவி இரண்டில் இருந்தும் விலகுவதாக லிஸ் டிரஸ் அறிவித்துள்ளார்.
சில மணிநேர இடைவெளியில் வெளியான கருத்துகளால் பிரித்தானிய அரசியல் சூழ்நிலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.