உயிர் உறையும் கடும் குளிர்... கொத்துக்கொத்தாக உறைந்து விழும் உயிரினங்கள்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அமெரிக்காவில் உயிர் உறையும் கடும் குளிர் காரணமாக 5 அடி நீளம் கொண்ட மிகப்பெரிய உடும்புகள் உறைந்துபோய் மரங்களில் இருந்து கொத்துக்கொத்தாக தரையில் விழுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிகப்பெரிய உடும்புகள்
இதனையடுத்து மக்கள் எச்சரிக்கையுடன் தொடர்புடைய பகுதிகளை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா கடும் பனிப்பொழிவு மற்றும் கடுமையான குளிரால் தவித்து வருகிறது.
பெரும் மரங்களில் வாழும் மிகப்பெரிய உடும்புகள், குளிர் தாங்க முடியாமல் உறைந்துபோய் தரையில் விழுவதாக கூறுகின்றனர். கடல் ஆமைகள் கூட கடும் குளிரால் உறைந்த நிலையில் கரை ஒதுங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Shutterstock
பல்லிகள் கூட உறுந்துபோய் மரங்களில் இருந்து விழுகின்றன. ஆனால் உடும்புகள் மிகப்பெரிதாக இருப்பதால், பல்லிகளின் கணக்கு வெளிவரவில்லை என ஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
வனவிலங்கு அதிகாரிகள் மும்முரம்
உடும்புகளால் பிற உயிரினங்கள் போன்று தங்கள் உடலை சூடுபடுத்திக்கொள்ள முடியாது. இதனாலையே, கடும் குளிரை தாங்க முடியாமல், உறைந்துபோயுள்ளன. இதனிடையே, வனவிலங்கு அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக ஊர்வனவற்றை மீட்பதிலும், கடும் குளிரின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உடும்புகள் குளிரை எதிர்கொண்டுள்ளதாகவும், கடந்த காலங்களை விட தற்போது மிக குறைவான என்ணிக்கையிலான உடும்புகளே உறைந்து போயுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
PA Images
இந்த நிலையில், பனிப்பொழிவு மற்றும் கடும் குளிரால் இதுவரை 50 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு அமெரிக்க மாகாணமான Montana மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், இங்குள்ள வெப்பநிலை -45C என பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.