சட்ட விரோத புலம்பெயர்தல் அதிகரிப்பு: ஜேர்மன் பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்
ஜேர்மனிக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பெடரல் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஜேர்மன் பொலிசார் வெளியிட்டுள்ள தகவல்
நேற்று, ஜேர்மன் பெடரல் குற்றவியல் பொலிஸ் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 2023ஆம் ஆண்டில் ஜேர்மனிக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
266,224 பேர் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இந்த எண்ணிக்கை, 2022ஐ விட 33.4 சதவிகிதம் அதிகமாகும்.
அத்துடன், அவர்களில் பெரும்பாலானோர் பெடரல் பொலிசாரிடம் பிடிபட்டுவிட்டதாகவும் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
ஜேர்மனிக்குள் மட்டுமல்ல, மொத்த ஐரோப்பாவுக்குள்ளும், 380,200 பேர் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக, ஐரோப்பிய எல்லை மற்றும் கடலோரக்கடற்படை ஏஜன்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |