நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்! முந்தும் திமுக... நாம் தமிழர் கட்சி நிலை என்ன? நேரலை வீடியோ
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் 12,601 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு பிப்ரவரி 19-ந் திகதி தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன்னர் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 286 மையங்களில் உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
சென்னையில் 15 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது நிவரப்படி திமுக கூட்டணி 4 மாநகராட்சிகளில் முன்னிலையில் உள்ளது.
அதே போல 12 நகராட்சியிலும் திமுக கூட்டணியே முன்னிலை பெற்றுள்ளது.
பெருமகளுர் பேரூராட்சி 5வது வார்டில் திமுக, 10வது வார்டில் சுயேட்சை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மொத்தமாக 41 பேரூராட்சிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பா.ஜ.க, நாம் தமிழர், பாமக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, அமமுக என 8 முனை போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது