லாக் அப் உயிரிழப்பு, வரதட்சணை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: குஷ்பு வலியுறுத்தல்
லாக் அப் உயிரிழப்பு, வரதட்சணை கொடுமை ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
குஷ்பு வலியுறுத்தல்
நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
லாக் அப் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. பொதுமக்களுக்கு பொலிஸார் கொடுக்கும் தொந்தரவு குறித்து முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தமிழகத்தில் பல பெண்கள் வரதட்சணை கொடுமையால் தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். வரதட்சணை வாங்குவது மட்டுமல்லாமல், கொடுப்பதும் தவறு தான்.
இதனால், லாக் அப் உயிரிழப்பு, வரதட்சணை கொடுமை ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திரைத்துறையில் 2 பேர் போதை பொருளில் சம்பந்தப்பட்டு இருப்பதால், திரைத்துறையில் போதைப்பொருள் அதிகமாகி விட்டது என்பதா?
இதனை பெரிதாக்காமல் போதைக்கு அடிமையானவரை எப்படி மீட்பது? என்ற வழியைப் பார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |