மக்களை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்! மீண்டும் ஊரடங்கு அமல்.. எந்த நாட்டில் தெரியுமா?
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் சீனாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லாஞ்சோ நகரில் மட்டும் 6 பேருக்கு கொரோனா பதிவாகியுள்ளது.
இதையடுத்து சீனாவின் வடமேற்கு நகரான லான்ஜோ நகரில் இன்று பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன்சு மாகாணத்தில் கடந்த ஞாயிற்று கிழமை மட்டும் 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து முதற்கட்டமாக கன்சு மாகாணத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.
இதற்கிடையே, தலைநகா் பெய்ஜிங்கில் 21 பேருக்கு டெல்டா வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சீனாவில் கொரோனா வேகமாக பரவுவதால் லான்ஜோ நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சீனாவில் மங்கோலியா நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் மேலும் ஒரு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.