மீண்டும் கொரோனா! சீனாவில் இந்த நகரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து துறைமுக நகரமான டாலியனில் உள்ள 5 மண்டலங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வடகிழக்கு துறைமுக நகரமான டாலியனில் கடந்த 24 மணி நேரத்தில் ஏழு பேருக்கு புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, உள்ளுர் அதிகாரிகள் டாலியனில் மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளும் திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி உள்ளுர் அதிகாரிகள், டாலியன் நகரில் உள்ள ஐந்து மண்டலங்களில் பள்ளிகளையும் பொது இடங்களையும் மூடிவிட்டனர் மற்றும் அத்தியாவசியத் ஊழியர்களைத் தவிர வேறு யாரும் வீட்டை விட்டு வெளியே வர தடை விதித்துள்ளனர்.
சீனாவில் சமீபத்திய நாட்களில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.