சுவிட்சர்லாந்தில் பொதுமுடக்கம் நெகிழ்த்தப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுமா: இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க இருக்கும் அரசு
சுவிட்சர்லாந்தில் அமுலில் இருக்கும் பகுதி நேர பொதுமுடக்கம் நெகிழ்த்தப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று சுவிஸ் பெடரல் கவுன்சில் அறிவிக்க உள்ளது.
அரசைப் பொருத்தவரையில் இது ஒரு கடினமான முடிவு. அமைச்சர்களுக்கோ எல்லா பக்கங்களில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படவேண்டும் என்று கோருவோர், கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதையும், கொரோனா வைரஸ் பன்மடங்கு வேகத்தில் பரவிவருவதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதற்கிடையில் தற்போதிருக்கும் பரிசோதனைகளால் கண்டுபிடிக்க இயலாத ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வேறு அச்சத்தை அதிகரித்துள்ளது.
ஆனால், மறு பக்கம் பார்த்தால், மீண்டும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுமானால், அது பொருளாதாரத்தை பயங்கரமாக பாதிக்கும்.
மக்களோ வீடுகளில் அடைந்து கிடந்து மனதளவில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆக, அரசு என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது தெரியவில்லை. என்றாலும், பெடரல் கவுன்சில் எடுக்கும் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.