தென் சென்னையில் முன்னிலையில் தமிழிசை - மக்களின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம்...!
மக்களின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம் என தென் சென்னையில் முன்னிலையில் இருக்கும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தென் சென்னையில் முன்னிலையில் இருக்கும் தமிழிசை
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் ஆறு வாரங்கள் வாக்களித்த பிறகு இன்று முடிவுகள் வெளியாகவுள்ளன.
குறித்த தேர்தலானது ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.
சென்னையில் இம்முறை நட்சத்திர தொகுதியாக கருதப்படும் தென் சென்னையை கைப்பற்றும் நோக்கில் அதிமுக, திமுக, பாஜக வேட்பாளர்களிடையே கடும்போட்டி நிலவி வந்தது.
தென்சென்னை மக்களவைத் தொகுதியில் வேளச்சேரி, விருகம்பாக்கம், தியாகராய நகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தொகுதியில் மொத்தம் 20 லட்சத்து 23,133 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழச்சி தங்கப்பாண்டியன் (திமுக), தமிழிசை சவுந்தரராஜன் (பாஜக), ஜெயவர்தன் (அதிமுக) போன்ற வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
பிரதான இவ்விரு கட்சிகளை எதிர்கொள்ளவே தமிழிசை சவுந்தரராஜனை பாஜகவால் களம் இறக்கப்பட்டார்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வேளையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், முதலில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு, மிகப்பெரிய தேர்தலை நடத்தி முடித்துள்ளது. மக்களின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |