மக்களவை தேர்தல் 2024: வாக்கு எண்ணிக்கையை உடனக்குடன் தெரிந்துக்கொள்வது எப்படி?
மக்களவைத் தேர்தல், ஆந்திரா, ஒடிசா மாநில சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் போன்றவற்றின் வாக்கு எண்ணிக்கையானது நாளை காலை 8 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த தேர்தலானது ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் உலகமே முடிவிற்காக காத்துக்கொண்டிருக்கிறது. இதை எப்படி உடனுக்குடன் பார்வையிடலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
உடனக்குடன் தெரிந்துக்கொள்வது எப்படி?
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளமான https://results.eci.gov.in/ தளத்திற்கு சென்று பார்வையிட முடியும். அல்லது லங்காசிறி தளத்தின் வாயிலாகவும் தெரிந்துக்கொள்ள முடியும்.
மும்பை உட்பட மகாராஷ்டிராவில் உள்ள திரையரங்குகளில் மூவிமேக்ஸ் தேர்தல் முடிவுளை நேரடியாக ஒளிபரப்பும்.
காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் "தேர்தல் முடிவுகள் 2024" என்ற ஆறு மணி நேர நிகழ்ச்சிக்கான முன்பதிவுகளை பேடிஎம்மில் ஆன்லைனில் காணலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |